April 22, 2017
இந்திய வங்கிகளில் கடனாக வாங்கி ஏமாற்றிய பணத்தை இங்கிலாந்து நிறுவனங்களில் விஜய் மல்லையா முதலீடு
வங்கிகளில் கடன் வாங்கி ஏமாற்றிவிட்டு தப்பிச் சென்ற தொழிலதிபர் விஜய் மல்லையாவை இந்தியாவுக்கு கொண்ட வருவதற்கான சட்ட நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ளன. வங்கிகளில் 9000 கோடி ரூபாய் கடன் வாங்கி திருப்பி செலுத்தாமல் கடந்த ஆண்டு மார்ச் 2-ம் தேதி லண்டளுக்கு விஜய் மல்லையா தப்பிச் சென்றார். குற்றச் சதி மற்றும் பண மோசடி புகாரில் மல்லையா தேடப்படும் குற்றவாளி என்பதால் அவரை இந்தியாவுக்கு திருப்பி அனுப்ப வேண்டும் என்று இங்கிலாந்து அரசுக்கு அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
மல்லையாவை திருப்பி அனுப்புவது தொடர்பான வழக்கு லண்டனில் மாவட்ட நீதிமன்ற முதன்மை நீதிபதி முன் அடுத்த மாதம் 17-ம் தேதி விசாரணைக்கு வரவுள்ளது. அப்போது மல்லையாவுக்கு எதிரான வலுவான ஆதாரங்களை வெளியுறவு அமைச்சகம் மற்றும் சிபிஐ அதிகாரிகள் தாக்கல் செய்ய உள்ளன. இதனிடையே மல்லையா இந்திய வங்கிகளில் கடனாக வாங்கி ஏமாற்றிய பணத்தை இங்கிலாந்து நிறுவனங்கள் மற்றும் வங்கிகளில் முதலீடு செய்திருப்பதற்கான ஆதாரங்களை அமலாக்கத்துறை அதிகாரிகள் இங்கிலாந்து அரசிடம் அளித்துள்ளனர்.
இது விஜய் மல்லையாவை இந்தியாவுக்கு கொண்டுவருவதற்கான நடவடிக்கைகளுக்கு வலு சேர்க்கும் என்று கருதப்படுகிறது. மல்லையா ஏப்ரல் 17-ம் தேதி லண்டனில் ஸ்காட்லாந்து போலீசார் கைது செய்யப்பட்டு நிபந்தனை ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய வங்கிகளில் கடனாக வாங்கி ஏமாற்றிய பணத்தை இங்கிலாந்து நிறுவனங்களில் விஜய் மல்லையா முதலீடு
Reviewed by மறத்தமிழன்
on
April 22, 2017
Rating: 5
Reviewed by மறத்தமிழன்
on
April 22, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.