April 27, 2017
தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம்- சிக்குகிறார் தினகரன் மனைவி அனுராதா?
இரட்டை இலை சின்னத்துக்காக தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுத்த வழக்கில் டிடிவி தினகரனின் மனைவி அனுராதாவிடம் விசாரணை நடத்தவும் டெல்லி போலீஸ் திட்டமிட்டுள்ளது.
இரட்டை இலை சின்னத்துக்காக தேர்தல் ஆணையத்துக்கே லஞ்சம் கொடுத்த வழக்கில் டிடிவி தினகரனின் மனைவி அனுராதாவிடமும் விசாரணை நடத்தவும் டெல்லி போலீஸ் திட்டமிட்டுள்ளது.
அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தை பெற டிடிவி தினகரன் தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுத்தார் என்பது வழக்கு. இவ்வழக்கில் புரோக்கர் சுகேஷ் சந்திரா, தினகரன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தற்போது டிடிவி தினகரனை 5 நாள் கஸ்டடியில் எடுத்துள்ளது டெல்லி போலீஸ். இதையடுத்து தினகரனை இன்று சென்னைக்கு வந்த போலீசார் சிபிஐ அலுவலகத்தில் வைத்து விசாரித்து வருகின்றனர்.
இந்நிலையில் தினகரன் மனைவி அனுராதாவிடமும் டெல்லி போலீஸ் விசாரணை நடத்த உள்ளனர். இந்த விசாரணையின் முடிவில் தேவைப்பட்டால் அனுராதாவை கைது செய்யவும் டெல்லி போலீஸ் திட்டமிட்டுள்ளனராம்.
ஜெயா டிவியை நிர்வகித்து வந்த அனுராதாவை கடந்த 2012-ஆம் ஆண்டு ஜெயலலிதா நீக்கினார். ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து மீண்டும் ஜெயா டிவியில் மறைமுகமாக அனுராதா கை ஓங்கியது குறிப்பிடத்தக்கது.
தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம்- சிக்குகிறார் தினகரன் மனைவி அனுராதா?
Reviewed by மறத்தமிழன்
on
April 27, 2017
Rating: 5
Reviewed by மறத்தமிழன்
on
April 27, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.