Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

April 24, 2017

“என் விவசாயிகள் தான் எனக்கு முக்கியம்!” கனடா பிரதமர் எடுத்த அதிரடி முடிவு! அமெரிக்கா அதிர்ச்சி!!


உலகத் தலைவராக மக்களால் ஏக மனதாக ஏற்றுக் கொள்ளப்பட்டவர் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடூ.
” அமெரிக்கா உங்களை விரட்டினால் என் நாட்டிற்கு வாருங்கள் என அகதிகளுக்கு அன்போடு அழைப்பு விடுத்தவ மனித நேய பண்பாளர்.
விவசாயத்திற்கு எப்போதும் முன்னுரிமை அளிப்பவர்.
இப்போது அவர் எடுத்துள்ள முடிவு கனடா விவசாயிகள் வயிற்றில் பால் வார்த்துள்ளது. ஆனால் அமெரிக்காவின் வயிறு தான் எரிகிறது.
காரணம் இத்தனை நாட்களாக அமெரிக்காவின் Wisconsin, New York ஆகிய இடங்களில் இருந்து கனடாவிற்கு அதிக அளவில் பால் ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தது.
இதனால் கனடா பால்  விவசாயிகள் பாதிக்கப்பட்டு வந்தனர். இந்நிலையில் கனடா பிரதமர் புதிய கொள்ளையை வடிவமைத்துள்ளார்.
இதன் அடிப்படையில் கனடா பால் விவசாயிகள் அதிகம் நன்மை அடைந்துள்ளதோடு, அமெரிக்காவின் ஏற்றுமதிக்கும் அடி விழுந்தது.
இதனால் அதிர்ச்சியடைந்துள்ள டொனால்டு டிரம்ப், கனடா தங்களை அவமானப்படுத்தி விட்டதாக குற்றம்சாட்டினார்.
ஆனால் இதற்கு அமைதியாக பதில் அளித்துள்ள கனடா பிரதமர் என் விவசாயிகளின் நலனிற்கு நான் தொடர்ந்து பாடுபடுவேன், அதே நேரம் அண்டை நாட்டுடன் மரியாதையான, முறையான அணுகுமுறையை கையாளுவேன் என கூறி அசத்தியுள்ளார்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.