Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

April 15, 2017

“அந்த நடிகை தினமும் குடிக்கிறார்”: எம்எல்ஏவின் பேச்சால் சர்ச்சை..!!


மகாராஷ்டிரா மாநிலத்தில் விவசாயிகளின் தற்கொலை செய்துகொள்வதற்கு காரணம், சரியான பயிர் விளைச்சல் இல்லாதது அல்ல, மது குடிப்பதால் தான் என்று நடிகையும், பாஜக எம்பியுமான ஹேமமாலினி பேசியதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், மஹாராஸ்டிரா மாநிலம் அச்சால்பூர் தொகுதியில் இருந்து, ஆறு முறை சுயேட்சை எம்எல்ஏ ஆன பச்சு கெடு, ஹேமமாலினியின் கருத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இது குறித்து பத்திரிக்கையாளர்களிடம் கூறியதாவது: விவசாயிகள் மது அருந்துவதால் தான் தற்கொலை செய்து கொள்கிறார்கள் என்று சிலர் கூறுகின்றனர். இந்த பேச்சு கண்டிக்கத்தக்கது.
யார்தான் மது அருந்தவில்லை? 75 சதவீத எம்எல்ஏக்கள் மற்றும் எம்பிக்கள் மது அருந்துகின்றனர். ஏன், நடிகையும் எம்பியுமான ஹேமமாலினி கூட தினமும் மது அருந்துகிறார்.
ஆனால், இவர்கள் யாரும் தற்கொலை செய்து கொள்ளவில்லையே ஏன்? விவசாயிகளின் உற்பத்தி பொருள் அதிகரித்துள்ளது, ஆனால் உற்பத்தி பொருளுக்கு ஏற்ற விலை அதிகரிக்கவில்லை.
பணப்பற்றாகுறையினால் தான் தற்கொலை செய்கிறார்கள். விவசாயிகளின் மரணத்தை குடிப்பழக்கத்தோடு தொடர்பு படுத்துவது தவறானது. இவ்வாறு அவர் கூறினார்.


No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.