April 24, 2017
மத்திய அரசு வேலை.... சப் இன்ஸ்பெக்டர் வேலை வாய்ப்பு எஸ்எஸ்சி அறிவிப்பு......
எஸ்எஸ்சி (ஸ்டாப் செலக்சன் கமிஷன்) சப் இன்ஸ்பெக்டர், அசிஸ்டண்ட் சப் இன்ஸ்பெக்டர் வேலை வாயப்புக்கு காலிப்பணியிடங்கள் உள்ளதாக அறிவித்துள்ளது.
மத்திய ஆயுதக் காவல் படையில் உள்ள துணை ஆய்வாளர் மற்றும் உதவி துணை ஆய்வாளர் பதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
வேலை - துணை ஆய்வாளர் மற்றும் உதவி துணை ஆய்வாளர்
கல்வித் தகுதி - ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு
மொத்தகாலிப் பணியிடம் - 2221
ஊதியம் - துணை ஆய்வாளர் பணிக்கு ரூ. 35,400/- முதல் 1,12,400/ மாதம், உதவி துணை ஆய்வாளர் பதவிக்கு ரூ. 29,200/- முதல் ரூ. 92,300/ மாதம் வழங்கப்படும்.
வேலை இடம் - இந்தியா முழுவதும்
விரிவான தகுதிகள்
அங்கீகரிக்கப்பட்ட ஏதேனும் ஒரு கல்வி நிறுவனத்தில் பட்டப்படிப்பினை முடித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு -
துணை ஆய்வாளர் மற்றும் உதவி துணை ஆய்வாளர் பணிக்கு 20 முதல் 25 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
டெல்லி போலீஸ்ஸில் துணை இன்ஸ்பெக்டர் பணிக்கு - 872 காலியிடங்கள்
எல்லை பாதுகாப்புப் படையில் துணை இன்ஸ்பெக்டர் பணிக்கு (பி.எஸ்.எஃப்) - 343 காலியிடங்கள்
மத்திய தொழில்துறை பாதுகாப்புப் படையில் உள்ள துணை இன்ஸ்பெக்டர் பணிக்கு (சிஐஎஸ்எஃப்) - 88 காலியிடங்கள்
மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் உள்ள துணை இன்ஸ்பெக்டர் பதவிக்கு (சிஆர்பிஎஃப்) - 241 காலியிடங்கள்
சசஸ்தா சீமா பால் துணை இன்ஸ்பெக்டர் பணிக்கு (எஸ்எஸ்பி) - 114 காலியிடங்கள்
மத்திய தொழில் பாதுகாப்புப் படையில் உள்ள துணை இன்ஸ்பெக்டர் பதவிக்கு (சிஐஎஸ்எஃப்) - 563 காலியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தேர்ந்தெடுக்கப்படும் முறை
விண்ணப்பதாரர்கள் இரண்டுக் கட்ட எழுத்துத் தேர்வின் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். முதல் தாள் தேர்வு 200 மதிப்பெண்களுக்கும் இரண்டாம் தாள் தேர்வு 200 மதிப்பெண்களுக்கும் நடைபெறும். தேர்வு 2 மணி நேரம் நடைபெறும். தேர்வுத்தாள் ஆங்கிலம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் அச்சிடப்பட்டிருக்கும். மேலும் மல்டிபிஃல் ஜாய்ஸ் கேள்விகள்தான் இரண்டு கட்டத் தேர்விலும் கேட்கப்படும். தவறான கேள்விகளுக்கு 0.25 நெகட்டிவ் மார்க் உண்டு. எனவே தேர்வு எழுதுபவர்கள் கவனமாக எழுதவும்.
விண்ணப்பக்கட்டணம் - ரூ. 100/. விண்ணப்பக்கட்டணமாக விண்ணப்பதாரர்களிடமிருந்து வசூலிக்கப்படுகிறது. எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள் மற்றும் பெண்களுக்கு விண்ணப்பக்கட்டணம் எதுவும் கிடையாது.
விண்ணப்பிக்க விரும்புபவர்கள் 15 மே 2017ம் தேதிக்குள் விண்ணப்பிக்கவும்.
மத்திய அரசு வேலை.... சப் இன்ஸ்பெக்டர் வேலை வாய்ப்பு எஸ்எஸ்சி அறிவிப்பு......
Reviewed by மறத்தமிழன்
on
April 24, 2017
Rating: 5
Reviewed by மறத்தமிழன்
on
April 24, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.