Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

April 22, 2017

கோடையிலும் குறைவின்றி தண்ணீர் கொட்டும் அகஸ்தியர் அருவி சுற்றுலாபயணிகள் அலைமோதல்


  பாபநாசம் அகஸ்தியர் அருவியில் கோடையிலும் குறைவின்றி தண்ணீர் கொட்டுகிறது. இதனால் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலை மோதுகிறது. தமிழகம் முழுவதும் பருவமழை பொய்த்து கடும் வறட்சி நிலவும் நிலையில், தற்போது கோடை வெயிலும் சுட்டெரிப்பதால் வீடுகளில் பொதுமக்கள் இருக்க முடியாத அளவிற்கு அனலின் தாக்கம் அதிகமாக உள்ளது. இதனால் பொதுமக்கள் கோடை விடுமுறையை கழிக்க சுற்றுலா தலங்களை நோக்கி படையெடுத்த வண்ணம் உள்ளனர்.

நெல்லை மாவட்ட சுற்றுலா தலங்களிலும், தற்போது சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்த வண்ணம் உள்ளது. இங்குள்ள மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பல அருவிகள் உள்ளன. இதில் களக்காடு மலைப்பகுதியிலுள்ள அருவிகளில் மழைக் காலங்களில் மட்டுமே தண்ணீர் விழும். குற்றாலத்திலுள்ள அருவிகளில் சீசன் காலங்களில் மட்டுமே தண்ணீர் விழும்.

ஆனால் பாபநாசம் அகஸ்தியர் அருவியில், ஆண்டு முழுவதும் தண்ணீர் கொட்டுகிறது. இதனால் நெல்லை மாவட்டம் மட்டுமின்றி தமிழகம் முழுவதும் இருந்து சுற்றுலா பயணிகள் இங்கு வந்து ஆனந்தமாக குளித்து மகிழ்வார்கள். இந்த அருவிப்பகுதி வனத்துறையினரின் கட்டுப்பாட்டில் இருப்பதால் மாலை 5 மணிக்கு மேல் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்படுவதில்லை. அருவிக்கு குளிக்க வருபவர்கள் பாபநாசம் வனச்சோதனை சாவடியில் சோதனைக்கு பின்னர்தான் அனுமதிக்கப்படுகின்றனர். மதுபாட்டில்கள் மற்றும் பிளாஸ்டிக் பொருட்கள் கொண்டு செல்வதற்கு அனுமதியில்லை.

தற்போது கோடை வெயில் கொளுத்தும் நேரத்திலும் அகஸ்தியர் அருவியில் குறைவின்றி தண்ணீர் கொட்டுகிறது. நேற்று விடுமுறை தினம் என்பதால் தமிழகத்தின் பல பகுதிகளிலிருந்தும் சுற்றுலா பயணிகள் அதிக அளவு வருகை தந்து ஆனந்தமாக குளித்து மகிழ்ந்தனர். வரும் நாட்களில் அகஸ்தியர் அருவியில் கூட்டம் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.