Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

April 16, 2017

'யாருக்கும் நான் பயப்பட மாட்டேன்' நாராயணசாமிக்கு கிரண்பேடி பதில்


சென்னை ஐ.சி.எப். (ரயில் பெட்டி தொழிற்சாலை) வளாகத்தில் உள்ள அம்பேத்கர் அரங்கில் 62-வது ரயில்வே வார விழா நேற்று நடந்தது. இந்த விழாவுக்கு ஐ.சி.எப். பொதுமேலாளர் எஸ்.மணி தலைமை வகித்தார்.விழாவுக்கு சிறப்பு விருந்தினராக புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி பங்கேற்றார். அவர் பேசுகையில், ''மக்கள் பொதுவாக தங்கள் உரிமைகளை பற்றி மட்டுமே சிந்தித்து வருகிறார்கள். அந்த உரிமை பறிக்கப்பட்டால்தான் போராடுகிறார்கள். கடமைகளை நினைத்தும் உழைத்தால் தான் தேசம் முன்னேறும். இளைஞர் முன்னேற்றம் தான் நாட்டின் பலம். அதனுடன் ஒற்றுமையும் சேரும்போது நாட்டின் வளர்ச்சி இரட்டிப்பாகும். புதுச்சேரி மாநிலத்தின் ஆளுநராக நியமிக்கப்பட்டது எனக்கு கிடைத்தது புது அனுபவம். அப்போதே எனது கடமை என்ன? என்பதை நான் உணர்ந்துவிட்டேன்'' என்று பேசினார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கிரண்பேடி கூறியதாவது, ''ஆளுநரின் (கிரண்பேடி) அதிகாரம் என்ன? முதலமைச்சரின் ( நாராயணசாமி) அதிகாரம் என்ன? என்பது அரசியலமைப்பு சட்டத்தில் தெளிவாக கூறப்பட்டு இருக்கிறது. எனது அதிகார வரம்புக்கு உட்பட்டே நான் செயல்படுகிறேன். நான் எதுக்கும், யாருக்காகவும் பயப்பட மாட்டேன். என் வாழ்க்கையில் நிறைய ஏற்றத்தாழ்வுகளை பார்த்துவிட்டேன். எனவே, எதற்கும் கலங்க மாட்டேன். ஆளுநர் பதவிக்கான வரம்புகளை மீறி நீங்கள் செயல்படுவதாக உங்கள் மீது வழக்கு தொடரப்பட்டு உள்ளதே என்று கேட்கிறீர்கள். வரம்பு, அதிகார எல்லை, செயல்பாடு எல்லாவற்றையும் அரசியலமைப்பு ரீதியாக நான் பின்பற்றி வருகிறேன். எனவே, இந்த வழக்கில் நல்ல தீர்ப்பு கிடைக்கும். அப்படி கிடைக்கும் தீர்ப்பு நல்ல அரசியலுக்கு முன்னோட்டமாக அமையும்'' என்று சொன்னார்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.