Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

April 4, 2017

மணல் திட்டாக மாறியது காவிரி ஆறு: குடிநீருக்கு தவிக்கும் கரையோர கிராம மக்கள்


மேட்டூர் அணைக்கு தண்ணீர் வரத்து நின்றுவிட்டதால் காவிரி கரையோரத்தில் வசிக்கும் மக்களுக்கு குடிநீர் பற்றாக்குறை ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது. தமிழக விவசாயத்தில் முக்கிய பங்கு வகிக்கும் மேட்டூர் அணையின் நீர் மட்டம் வரலாறு காணாத வகையில் குறைந்துள்ளது. பருவமழை பொய்ததால் விவசாயம் மற்றும் குடிநீர் தேவைக்கான ஆதாரத்தை மேட்டூர் அணை இழந்துவிட்டதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர். காவிரி பரப்பில் ஆங்காங்கே தேங்கி நிற்கும் தண்ணீரும் வறண்டு போய் மணல் திட்டாக காட்சியளிப்பது வேதனை அளிப்பதாக காவிரி கரையோர மக்கள் குமுறுகின்றனர்.

காவிரியில் தண்ணீர் வராததால் ஆற்று மணலில் ஊற்று தோன்றி குடிநீர் தேவையை பூர்த்தி செய்து கொள்வதாக பொதுமக்கள் கூறுகிறார்கள். இனி வரும் காலங்களில் மணல் பரப்பில் தேங்கி நிற்கும் தண்ணீர் வறண்டு போகும் பட்சத்தில் ஊற்று நீரும் இல்லாமல் போய்விடும் என மக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். மேட்டூர் அணைக்கு வரக்கூடிய சொற்ப அளவிலான தண்ணீரும், கர்நாடகா அரசு மாதேஸ்வரன் மலைக்கோவிலுக்காக தடுத்து ஏற்படுத்தி தண்ணீரை எடுத்து விடுகிறது. குறுவை, சம்பா சாகுபடி அறவே பொய்த்து விட்ட நிலையில், கர்நாடகத்திடம் இருந்து காவிரி நீரை கேட்டு பெறாவிட்டால் குடிநீர் பஞ்சம் தலைவிரித்தாடும் என்பதே காவிரி கரையோர மக்களின் வேதனையாக உள்ளது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.