April 9, 2017
ராமர் கோவிலுக்காக தூக்கில் தொங்கவும் தயார் - மத்திய அமைச்சர் உமாபாரதி ஆவேசம்!
ராமர் கோவிலுக்காக ஜெயிலுக்குப்போகவும் தூக்கில் தொங்கவும் தயாராக இருப்பதாக மத்திய நீர்வளத்துறை அமைச்சர் உமா பாரதி தெரிவித்துள்ளார். தன்னை பொறுத்தவரை அது ஒரு நம்பிக்கை சார்ந்த பிரச்சனை என்றும் உமாபாரதி கூறினார்.
மத்திய நீர்வளத்துறை அமைச்சர் உமா பாரதி நேற்று உத்தரப்பிரதேசத்தில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது ராமர் கோவில் என்பது என்னைப் பொறுத்தவரை நம்பிக்கைக்குரிய விஷயம். அதற்காக நான் மகத்தான பெருமை கொள்கிறேன் என்றார்.
மேலும் ராமர் கோவில் கட்டுவது குறித்து முதல்வர் ஆதித்யநாத் உடன் பேசினீர்களா என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அமைச்சர் உமாபாரதி, நாங்கள் ராமர் கோவில் கட்டுவது குறித்த பேசத் தேவையில்லை என்றார்.
மாற்று மக்கள் கிடையாது
இந்தப் பிரச்சனையில் நாங்கள் ஒன்றும் மாற்று மக்கள் கிடையாது. முதல்வர் ஆதித்யநாத்தின் குரு மகந்த் அவைத்நாத் கோவில் தொடர்பான பணிகளுக்கு தலைவர் என்றும் கூறினார்.
தூக்கில் தொங்க ரெடி
ராமர் கோவிலுக்காக நான் ஜெயிலுக்கு போக வேண்டுமானாலும் போவேன். தூக்கில் தொங்க வேண்டுமானாலும் தொங்க தயாராக இருக்கிறேன் என்றும் உமாபாராதி கூறினார்,
பேச்சு வார்த்தை மூலம் தீர்வு?
இந்த பிரச்சினையில் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண்பதா அல்லது பிற வழிகளில் தீர்வு காண்பதா என்பதை கோர்ட்டுதான் தீர்மானிக்க வேண்டும் என்றும் உமாபாரதி கூறினார். அதேநேரத்தில் உச்சநீதிமன்றம் இப்பிரச்சனையை வெளியில் பேசி தீர்க்க அறிவுறுத்தியிருப்பதையும் செய்தியாளர்களிடம் பேசும் போது உமாபாரதி சுட்டிக்காட்டினார்.
அதிகம் பேச மறுப்பு
ராமர் கோவில் தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளதால் இதனை அதிகம் பேச உமாபாரதி மறுப்பு தெரிவித்தார். பாபர் மசூதி இடிப்பு சதித் திட்டத்தில் அத்வானி, உமாபாரதி உள்ளிட்ட 13 பேருக்கு தொடர்பு உள்ளதாக சுப்ரீம்கோர்ட்டில் சிபிஐ மனுத்தாக்கல் செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.
ராமர் கோவிலுக்காக தூக்கில் தொங்கவும் தயார் - மத்திய அமைச்சர் உமாபாரதி ஆவேசம்!
Reviewed by மறத்தமிழன்
on
April 09, 2017
Rating: 5
Reviewed by மறத்தமிழன்
on
April 09, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.