Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

April 16, 2017

பாலியல் அத்துமீறல் வீடியோக்களை தடுக்க வாட்ஸ்அப் ஒத்துழைப்பு


பாலியல் அத்துமீறல் தொடர்பான வீடியோக்கள் வாட்ஸ்அப் மூலம் பரவுவதைத் தடுக்க ஒத்துழைப்பு அளிப்போம் என உச்ச நீதிமன்றத்துக்கு வாட்ஸ்அப் தெரிவித்துள்ளது.

பாலியல் தொடர்பான வீடியோக்கள் பரவுவதைத் தடுப்பதற்காக, நீதிமன்றம் அமைக்கும் குழுவில் தொழில்நுட்ப தீர்வுகளை வாட்ஸ்அப் அளிக்க வேண்டும் என நீதிமன்றம் கேட்டுக் கொண்டுள்ளது. வாட்ஸ்அப் சார்பாக நீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் ஆஜரானார்.

கமிட்டியின் முன்பு அமர்ந்து எல்லாவற்றையும் விளக்குவதற்காக வாட்ஸ்அப் ஆட்களை அனுப்பும் என்று சிபல் கூறினார். மேலும் வாட்ஸ்அப் பொறியாளர்களும் நிபுணர்களும் கமிட்டிக்கு தொழில்நுட்பங்கள் குறித்து செயல்முறை விளக்கம் அளிப்பார்கள். குறிப்பாக குறியீடுகள் தொடர்பாக தொழில்நுட்பங்களை விளக்குவார்கள் என்று கூறினார். நிறுவனத்தின் பொறியாளர்கள் இரண்டு வாரங்களுக்குள் கமிட்டியைச் சந்திப்பார்கள் என்றும் கூறினார்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.