April 8, 2017
மீண்டும் நெடுவாசலில் போராட்டம் எப்போது? தொடங்கியது ஆலோசனைக் கூட்டம்
ஹைட்ரோ கார்பனுக்கு எதிரான போராட்டத்தை மீண்டும் கையில் எடுப்பது தொடர்பான கூட்டம் இன்று நெடுவாசலில் தொடங்கி நடைபெற்று வருகிறது.
நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக 22 நாட்கள் நடந்த போராட்டம் நடத்தப்பட்டது.
இதனைத் தொடர்ந்து மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன், அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் தமிழக அரசின் உறுதிமொழியை ஏற்று 3 கிராமங்களிலும் பொதுமக்கள் தற்காலிகமாக போராட்டத்தை நிறுத்தி வைத்தனர். மக்களுக்கு எதிரான எந்த திட்டத்தையும் மத்திய அரசு செயல்படுத்தாது என்று உறுதிமொழியும் அவர்களுக்கு அளிக்கப்பட்டது.
இந்நிலையில் மக்களின் எதிர்ப்பை மீறி கடந்த 27-ம் தேதி நாடு முழுவதும் 31 இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்க மத்திய பெட்ரோலிய துறை இணை அமைச்சர் தர்மேந்திர பிரதான் முன்பு 22 நிறுவனங்களுடன் ஒப்பந்தம் கையெழுத்தானது.
அதிர்ச்சி
மத்திய அரசின் இந்த நம்பிக்கை துரோகச் செயலால் மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதனால் நெடுவாசல் கிராம பொதுமக்கள் மத்திய அரசு இந்த திட்டத்தை மீண்டும் தொடர்ந்தால் மிகப்பெரிய போராட்டம் தொடரும் என்று தெரிவித்தனர்.
விழிப்புணர்வு
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம மக்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் போராட்ட குழுவினர் நேரில் சென்று துண்டு பிரசுரங்கள் வழங்கியும், சுவரொட்டிகள் ஒட்டியும் மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வந்தனர்.
கூட்டம்
இந்நிலையில், போராட்டம் நடத்துவது தொடர்பாக நெடுவாசல் நாடியம்மன் கோயில் திடலில் 100 கிராமங்களின் ஆலோசனைக் கூட்டம் தொடங்கியுள்ளது. ஆலோசனைக் கூட்டத்தின் முடிவில் அடுத்த கட்ட போராட்டம் பற்றி அறிவிக்கப்பட உள்ளது.
இன்னும் எழுச்சி
நெடுவாசலில் அடுத்து எடுக்கப் போகும் போராட்டம் மிக வீரியமிக்கதாகவும், மத்திய மற்றும் மாநில அரசுகளின் ஏமாற்று வித்தைகளுக்கு அடிபணியாமலும் இருக்கும் வகையில் இந்தக் கூட்டத்தில் திட்டங்கள் தீட்டப்பட உள்ளன. ஆக, நெடுவாசல் மீண்டும் ஒரு போராட்டக்களமாக மாறும் நிலை உருவாகியுள்ளது.
மீண்டும் நெடுவாசலில் போராட்டம் எப்போது? தொடங்கியது ஆலோசனைக் கூட்டம்
Reviewed by மறத்தமிழன்
on
April 08, 2017
Rating: 5
Reviewed by மறத்தமிழன்
on
April 08, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.