Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

April 25, 2017

திருவாரூர் அருகே ரெயில் மறியலில் ஈடுபட்ட பி.ஆர்.பாண்டியன்- விவசாயிகள் கைது


விவசாயிகளுக்கு ஆதரவாக திருவாரூர் அருகே ரெயில் மறியலில் ஈடுபட்ட பி.ஆர்.பாண்டியன் உள்பட 250 விவசாயிகள் கைது செய்யப்பட்டனர்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும், விவசாயிகளுக்கு ஆதரவாக நடைபெறும் கடையடைப்பு போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தும் அனைத்து விவசாய சங்கங்கள் சார்பில் இன்று ரெயில் மறியல் போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.

அதன்படி அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் தலைமையில் திருவாரூர்- நீடாமங்கலம் இடையே உள்ள குளிக்கரை என்ற இடத்தில் விவசாயிகள் தஞ்சையில் இருந்து நாகை நோக்கி சென்ற பாசஞ்சர் ரெயிலை இன்று காலை மறித்து போராட்டம் நடத்தினர். இதுபற்றிய தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற போலீசார் பி.ஆர்.பாண்டியன் மற்றும் அவருடன் போராட்டத்தில் பங்கேற்ற விவசாயிகள் உள்பட 250 பேர் கைது செய்யப்பட்டனர்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.