April 16, 2017
சுவாதி கொலை: நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் இப்பவும் சிசிடிவி கேமரா இல்லை!
ஏதாவது அசம்பாவித சம்பவம் நடந்தால் 'குய்யோ முறையோ' என்று கூச்சலிடுவதும், பின்னர் அதனை மறந்து போவதும் நமது வழக்கம். தமிழகத்தையே உலுக்கிய சுவாதி கொலை சம்பவம் நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில்தான் நடந்தது.
இந்த ரயில் நிலையத்தில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படாததால், குற்றவாளியை கண்டுபிடிப்பதில் பல குளறுபடிகள். சுவாதியை கொலை செய்ததாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட ராம்குமாரும் தற்கொலை செய்து கொண்டார். நீதிமன்றமும் வழக்கை முடித்து வைத்துவிட்டது. ஆனால், சுவாதி கொலை சம்பவம் நடந்து 10 மாதங்கள் ஆகியும் இன்னும் நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் சிசிடிசி கேமராக்கள் பொருத்தப்படாததுதான் வேதனையான விஷயம்.
சுவாதி கொலை சம்பவத்துக்கு பிறகு, ' நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் சிசிடிவி கேமராக்கள் பொருத்த நடவடிக்கை எடுக்கப்படும்' என ரயில்வே நிர்வாகம் கூறியிருந்தது. அறிவித்தபடி, சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படவில்லை.
சென்னையில் சென்ட்ரல், எக்மோர், தாம்பரம் உள்ளிட்ட லட்சக்கணக்கான பயணிகள் வந்து செல்லும் 7 ரயில் நிலையங்களில்தான் சிசிடிசி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. 'அதிக பெண் பயணிகள் வந்து செல்லும் அனைத்து புறநகர் ரயில் நிலையங்களில் உடனடியாக சிசிடிசி கேமராக்கள் பொருத்தப்பட வேண்டும்' என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தற்போது நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தை லயோலா கல்லூரி தத்தெடுத்து தூய்மை செய்வது உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டு வருகிறது.
சுவாதி கொலை: நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் இப்பவும் சிசிடிவி கேமரா இல்லை!
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
April 16, 2017
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
April 16, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.