Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

April 17, 2017

லஞ்சம் கொடுத்த வழக்கு.. எந்த நேரத்திலும் தினகரன் கைது செய்யப்படலாம்?


இரட்டை இலை சின்னத்தைப் பெற இடைத் தரகர் மூலம் லஞ்சம் கொடுத்ததாக தினகரன் மீது டெல்லி குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ள நிலையில் அவர் எந்த நிமிடத்திலும் கைது செய்யப்படலாம் என கூறப்படுகிறது

அதிமுகவின் சின்னமான இரட்டை இலையைக் கைப்பற்றுவதற்கு இடைத் தரகர் மூலம் பணம் கொடுத்ததாக டிடிவி தினகரன் மீது டெல்லி குற்றப் பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதனால் அவர் எந்தநேரத்திலும் கைது செய்யப்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது.

ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு, ஒ.பன்னீர் செல்வம் முதல்வராக்கப்பட்டார். ஆனால், அவரைக் கட்டாயப்படுத்தி அவரிடமிருந்து பதவி பறிக்கப்பட்டாத அவர் சசிகலா தரப்பினர் மீது குற்றம்சாட்டினார். அதையடுத்து அதிமுக, சசிகலா அணி, ஒபிஎஸ் அணி என இரண்டு அணியாகப் பிரிந்தது.

ஆர்கே நகரில் இடைதேர்தல் ஏப்ரல் 12ஆம் தேதி நடக்க இருந்தது. அப்போது இரட்டை இலை யாருக்கு என்று எழுந்த பிரச்சனையால் அது முடக்கப்பட்டது.

இந்நிலையில் ஆர்கே நகரில், அதிமுக அம்மா அணியைச் சேர்ந்த தினகரன், வாக்காளர்களுக்கு பணம் கொடுத்தார் என்ற புகாரையடுத்து அங்கு தேர்தல் நிறுத்தப்பட்ட்டது. அந்தப் புகாரையடுத்து, தற்போது டெல்லி குற்றப் பிரிவு போலீசார் தினகரன் இரட்டை இலையை மீட்பதற்கு இடைத் தரகர்கள் மூலம் பணம் கொடுத்ததாக வழக்கு பதிவு செய்துள்ளனர்.

குற்றப் பிரிவு போலீசார் தழிழகத்தைச் சேர்ந்த சந்திரசேகர், டெல்லியைச் சேர்ந்த சதீஷ் சந்திரா ஆகியோரை விசாரித்தனர். மேலும் அவர்களிடமிருந்து ரூ. 1.80 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அதனால் தினகரன் எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம் என்ற சூழல் உருவாகியுள்ளது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.