Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

April 18, 2017

ரூ9,000 கோடி வங்கி கடன்களை கட்டாமல் தப்பி ஓடிய விஜய் மல்லையா இங்கிலாந்தில் அதிரடி கைது!


இந்திய வங்கிகளில் ரூ9,000 கோடி கடன்களை கட்டாமல் தப்பி ஓடிய விஜய் மல்லையா இங்கிலாந்தில் பிடிபட்டார்.

இந்திய பொதுத்துறை வங்கிகளில் ரூ9,000 கோடி ரூபாய் கடன்களை வாங்கிவிட்டு அதை திருப்பி செலுத்தாமல் நாட்டை விட்டு தப்பி ஓடி தலைமறைவான தொழிலதிபர் விஜய் மல்லையா இங்கிலாந்தில் கைது செய்யப்பட்டுள்ளார். விஜய் மல்லையாவை ஸ்காட்லார்ந்து யார்டு போலீஸ் கைது செய்துள்ளது.

இந்தியாவின் முன்னணி தொழிலதிபர்களில் ஒருவராக திகழ்ந்தவர் விஜய் மல்லையா. மதுபான தொழில் மற்றும் விமான சேவைகளில் விஜய் மல்லையா நிறுவனங்கள் ஈடுபட்டு வந்தன.

தங்களது நிறுவனங்கள் பெயரால் இந்தியாவின் பொதுத்துறை வங்கிகளில் ரூ9,000 கோடி கடன்களைப் பெற்றார். வங்கிகளும் மல்லையாவுக்கு சளைக்காமல் கடன்களைக் கொடுத்தன.
ஆனால் மல்லையா வாங்கிய கடன்களைத் திருப்பிச் செலுத்தாமல் இந்தியாவை விட்டு தப்பி ஓடிவிட்டார். இந்தியாவை விட்டு தப்பி ஓடி இங்கிலாந்தில் சொகுசு வாழ்க்கை வந்தார் மல்லையா
.
இதனிடையே இந்திய பொதுத்துறை நிறுவனங்கள் மல்லையாவுக்கு எதிரான நீதிமன்ற கதவுகளைத் தட்டின. இதையடுத்து மல்லையாவை கைது செய்யும் முயற்சிகள் தீவிரமாக்கப்பட்டன.

தற்போது இந்திய அரசின் வேண்டுகோளை ஏற்று இங்கிலாந்தில் தலைமறைவாக இருந்த மல்லையா கைது செய்யப்பட்டுள்ளார். லண்டன் நீதிமன்றத்தில் அவர் ஆஜர்படுத்தப்பட்டு பின்னர் இந்தியாவுக்கு நாடு கடத்தப்படுவார்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.