April 18, 2017
ஆய்வக உதவியாளர் பணியிடங்கள்: 6 மாவட்டங்களில் இன்று கலந்தாய்வு; வேலூர், கிருஷ்ணகிரியில் நாளை நடைபெறும்
ஆய்வக உதவியாளர் பணியிடங்களுக்கு இதுவரை 22 மாவட்டங்களில் கலந்தாய்வு நிறைவு பெற்றுள்ள நிலையில் திருவள்ளூர் உள்ளிட்ட ஆறு மாவட்டங்களுக்கு செவ்வாய்க்கிழமையும் (ஏப்.18),
வேலூர், கிருஷ்ணகிரி மாவட்டங்களில் புதன்கிழமையும் (ஏப்.19) கலந்தாய்வு நடைபெறும்.
4,362 காலியிடங்களை நிரப்ப... அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் காலியாகவுள்ள 4,362 ஆய்வக உதவியாளர் பணியிடங்களை நிரப்ப எழுத்துத் தேர்வு நடத்தப்பட்டு தேர்வு முடிவுகள் அண்மையில் வெளியிடப்பட்டன. இதைத் தொடர்ந்து சான்றிதழ் சரிபார்ப்பு ஏப்ரல் 9-ஆம் தேதி முதல் 11-ஆம் தேதி வரை நடைபெற்றது.
140 பேர் வரவில்லை: இதையடுத்து எழுத்துத்தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பில் பெற்ற மதிப்பெண் கூட்டுத்தொகை அடிப்படையில் தரவரிசைப் பட்டியல் சனிக்கிழமை வெளியிடப்பட்டது. இதைத் தொடர்ந்து 22 மாவட்டங்களில் கலந்தாய்வு திங்கள்கிழமை நடைபெற்றது. இதற்கு 2,558 பேர் அழைக்கப்பட்டிருந்தனர். இதில் 2,418 பேர் பங்கேற்றனர். வேறு தேர்வுகளில் தேர்ச்சி பெற்றது உள்ளிட்ட சில காரணங்களால் 140 பேர் வரவில்லை.
இதையடுத்து கடலூர், காஞ்சிபுரம், நாகப்பட்டினம், திருவள்ளூர், விருதுநகர், தருமபுரி ஆகிய 6 மாவட்டங்களில் ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட இடங்களில் செவ்வாய்க்கிழமை கலந்தாய்வு நடைபெறும்.
வேலூர், கிருஷ்ணகிரி...மாவட்டங்களில் தேர்வு பெற்றவர்களின் பட்டியல் செவ்வாய்க்கிழமை வெளியிடப்படும். அதையடுத்து இரு மாவட்டங்களைச் சேர்ந்த கலந்தாய்வு புதன்கிழமை (ஏப்.19) நடைபெறும் என பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஆய்வக உதவியாளர் பணியிடங்கள்: 6 மாவட்டங்களில் இன்று கலந்தாய்வு; வேலூர், கிருஷ்ணகிரியில் நாளை நடைபெறும்
Reviewed by மறத்தமிழன்
on
April 18, 2017
Rating: 5
Reviewed by மறத்தமிழன்
on
April 18, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.