Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

April 24, 2017

மகாபாரதம் குறித்து சர்ச்சை கருத்து! மே 5ல் கமல்ஹாசன் நேரில் ஆஜராக வள்ளியூர் நீதிமன்றம் உத்தரவு!


மகாபாரதம் குறித்து அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் நடிகர் கமல்ஹாசன் மே 5-ம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என வள்ளியூர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
சில நாள்களுக்கு முன்பு நடிகர் கமல்ஹாசன் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்திருந்தார். அப்போது, மகாபாரதம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்ததாகக் கூறப்பட்டது.
இந்தநிலையில், இந்திய இதிகாசமான மகாபாரதம் குறித்து நடிகர் கமல்ஹாசன் அவதூறாக பேசியதாக ஆதிநாத்சுந்தரம் என்பவர் வள்ளியூர் குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை இன்று விசாரித்த நீதிமன்றம், மே 5-ம் தேதி கமல்ஹாசன் நேரில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டது.
மேலும், விசாரணை அறிக்கையை தாக்கல் செய்யாத பழவூர் காவல்துறை ஆய்வாளருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது. ஒருமாதம் அவகாசம் கொடுத்தும் அறிக்கை தாக்கல் செய்யாததால் இந்த நடவடிக்கையை நீதிமன்றம் எடுத்துள்ளது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.