Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

April 17, 2017

சூரிய மின்சக்தி சேமிப்பு திறனை 3,000 சதவீதம் அதிகரிக்கும் புதிய தொழில்நுட்பம்!


உலக நாடுகளில் மின்சார உற்பத்தியில் சோலார் தொழில்நுட்பமானது முக்கிய இடத்தைப் பெற்றுவருகின்றது.

இதன் காரணமாக இத் தொழில்நுட்பத்தினை மேம்படுத்தும் முயற்சியில் விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர்.

இம் முயற்சியின் பயனாக சூரியமின் சக்தியை தற்போது சேமிக்கும் திறனை விடவும் 3,000 சதவீதம் அதிகமாக சேமிக்கக்கூடிய தொழில்நுட்பத்தினை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

இதற்காக புதிய வகை கிரபீனைக் கொண்டு (Graphene) மின்வாய் உருவாக்கப்பட்டுள்ளது.

இத் தொழில்நுட்பமானது நேரடியாக சோலார் கலங்களுடனேயே இணைக்கக்கூடிய வகையில் நெகிழ்ச்சித் தன்மை கொண்டது.

மேலும் விரைவான சேமிப்பு செயற்பாட்டிற்காக வினைத்திறன் வாய்ந்த மின்கொள்ளளவிகளும் பயன்படுத்தப்படுகின்றன.

இந்த அபார தொழில்நுட்பத்தினை அவுஸ்திரேலியாவின் மெல்பேர்ண் நகரில் உள்ள RMIT பல்கலைக்கழக விஞ்ஞானிகள் குழுவே கண்டுபிடித்துள்ளது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.