April 14, 2017
தெலுங்கானா முதலவர் 2 நாட்கள் கூலித் தொழிலாளியாக பணிபுரிகிறார் !
தெலுங்கானா முதலவர் சந்திரசேகரராவ் 2 நாட்கள் கூலித் தொழிலாளியாக பணிபுரிவதாக கூறியுள்ளார். சந்திரசேகர ராவ் கூறியதாவது: தெலுங்கானா விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் 2.40 லட்சம் டன் உரம் இலவசமாக வழங்கப்படும். இதனைத் தொடர்ந்து தான் 2 நாட்கள் கூலித் தொழிலாளியாக பணியாற்ற உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி கட்சியின் வருடாந்திர மாநாடு வரும் 21-ஆம் தேதி நடைபெறவுள்ளது.
இதற்கு நிதி திரட்டுவதற்காக அமைச்சர்கள், கட்சி எம்.எல்.ஏ.,க்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் உள்ளிட்டோர் 2 நாட்கள் கூலித் தொழிலாளிகளாக பணிபுரிவேன் இவ்வாறு சந்திரசேகர ராவ் கூறினார் . அந்த அடிப்படையில் அவரும் இரண்டு நாட்கள் கூலித் தொழிலாளியாக பணிபுரிய இருக்கிறார். இதற்கு சந்திரசேகர ராவ், தனது கட்சியின் நிறத்தின் அடிப்படையில் இளஞ்சிவப்பு தொழிலாளர் தினம் என்று பெயரிட்டுள்ளார்.
தெலுங்கானா முதலவர் 2 நாட்கள் கூலித் தொழிலாளியாக பணிபுரிகிறார் !
Reviewed by Admin
on
April 14, 2017
Rating: 5
Reviewed by Admin
on
April 14, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.