Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

April 24, 2017

எம்.ஜி.ஆர் உறவினர் விஜயன் கொலையில் 2 பேர் விடுதலை; 5 பேருக்கு ஆயுள் உறுதி!


எம்ஜிஆர் உறவினர் விஜயன் கொலை வழக்கில் பானு, எம்.கார்த்தி இரண்டு பேருக்கு விதிக்கப்பட் ஆயுள் தண்டனையை ரத்து செய்துள்ள சென்னை உயர்நீதிமன்றம், ஐந்து பேரின் ஆயுள் தண்டனையை உறுதி செய்துள்ளது.
மறைந்த முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் வளர்ப்பு மகள் சுதாவின் கணவர் விஜயன். இவர், கடந்த 2008ம் ஆண்டு ஜூன் மாதம் 4ம் தேதி இரவு காரில் கோட்டூர்புரம் அருகே சென்று கொண்டிருந்தபோது, ஒரு மர்ம கும்பல் காரை வழிமறித்து விஜயனை இரும்பு கம்பியால் அடித்துக் கொலை செய்தது.
இதுகுறித்து கோட்டூர்புரம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து முதலில் விசாரணை நடத்தினர். பின்னர், இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றப்பட்டது. காவல்துறையினர் நடத்திய விசாரணையின்போது, விஜயன் மனைவி சுதாவின் தங்கை பானு, கூலிப்படை மூலம் விஜயனை கொலை செய்திருப்பது தெரியவந்தது. கருணா என்ற போலீஸ்காரர் இந்த கூலிப்படையை அமர்த்தி கொலைக்கு உதவி செய்திருப்பதும் தெரியவந்தது.
இதையடுத்து பானு, எம்.கார்த்தி, காவலர் கருணா, கூலிப்படையை சேர்ந்த சுரேஷ், ஆர்.கார்த்தி, தினேஷ்குமார், சாலமன் உள்பட 7 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். இந்த வழக்கில் 2016 ஜூலையில் தீர்ப்பளித்த சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம், 7 பேருக்கும் ஆயுள் தண்டனை விதித்ததோடு, தலா 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தார்.
இந்த தீர்ப்பை எதிர்த்து ஏழு பேரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த உயர்நீதிமன்றம், பானுமதி, எம்.கார்த்திக் ஆகியோருக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை ரத்து செய்ததோடு, மற்ற ஐந்து பேரின் ஆயுள் தண்டனையை உறுதி செய்தது.
Dailyhunt

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.