Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

April 16, 2017

ஊட்டியில் அணை கட்ட 1955ல் திட்டம் போட்டு..! 1972ல் கைவிடப்பட்டது.. தடுத்து நிறுத்திய கேரளா..!!


தமிழகத்தின் ஊட்டியில் மோயர் ஆற்றின் குறுக்கே அணை கட்ட வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. இங்கு அணை கட்டுவதன் மூலம் தண்ணீர் செல்வதை தடுத்து நாம் அவர்களிடம் கையேந்தி நிற்பதை தவிர்க்க முடியும். மேலும் பல லட்சம் ஏக்கர் விவசய நிலங்கள் பாசன வசதி பெறும்.
இந்த நிலையில் கடந்த 1955ம் ஆண்டு ஊட்டியில் அணை கட்ட திட்டமிடப்பட்டது. பாண்டியாறு பொன்னம்புழா நீர்தேக்க திட்டமான இதற்கு கூடலூரில் இருந்து 5 கிலோ மீட்டர் தொலைவில் அடிக்கல் நாட்டப்பட்டது.
அதன்பிறகு இது குறித்து கேரளா பல்வேறு பொய் பிரசாரங்களை மேற்கொண்டு வந்ததால் 1972ம் ஆண்டு கைவிடப்பட்டது. இந்த திட்டம் மட்டும் நிறைவேற்றப்பட்டிருந்தால் ஈரோடு, நாமக்கல், சேலம், கரூர், திருச்சி, தஞ்சை மாவட்டங்களில் உள்ள பல லட்சம் வேளாண் நிலங்கள் பலன் அடைந்து இருக்கும்.
கூடலூர் உள்ளிட்ட பகுதிகள் சிறந்த சுற்றுலா தலமாகி இருக்கும். 40 மெகாவாட் நீர்மின் உற்பத்தி செய்வதோடு அந்த நீரை பெரிய குழாய்களில் மோயர் ஆற்றோடு இணைத்து பவானி ஆற்றோடு கலக்க செய்திருந்தால் அந்த பகுதியில் வேளாண் தொழிலையும் பெருக்கி இருக்க முடியும்.
இதுவரை ஆட்சியில் இருந்த திராவிட கட்சிகள் இதனை செயல்படுத்தவில்லை. அதற்கான நடவடிக்கையும் எடுக்கவில்லை

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.