April 12, 2017
1,300 குழந்தைகளுக்கு ஒரே தந்தை! DNA பரிசோதனையில் அதிர்ச்சி கண்டுபிடிப்பு - இன்னும் பல திடுக்கிடும் உண்மைகள் அம்பலம்
அமெரிக்காவின் டென்னிசி மாகாணத்தில் உள்ள நாஷ்வில் பகுதியில் நடந்த இந்த சம்பவம் விவரம் வருமாறு:-
அமெரிக்காவை சேந்ர்த தனியார் துப்பறியும் விசாரணை அதிகாரியை கடந்த 2001 ஆம் ஆண்டு குறித்த தனியார் விசாரணை அதிகாரியை தொடர்பு கொண்ட இரு இளைஞர்கள், தங்களது உண்மையான தந்தையை கண்டுபிடித்து தர தனித்தனியாக முறையிட்டுள்ளனர்.
இதைத்தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் பல வெளியாகின. குறித்த விசாரணையில் அந்த இரு இளைஞர்களின் உண்மையான தந்தை ஒரே நபர் என்பது தெரிய வந்தது.
இதனையடுத்து 15 ஆண்டுகளாக மேற்கொண்ட விசாரணையின் முடிவில் நாஷ்வில் பகுதியில் குடியிருக்கும் ஓய்வுபெற்ற அஞ்சலர் தான் இந்த 1,300 குழந்தைகளுக்கும் உண்மையான தந்தை என்பதை டி.என்.ஏ சோதனை மூலம் அவர் தெரிந்து கொண்டார்.
ஆனால் இந்த விவகாரம் தொடர்பாக பேசிய பலரும் தங்களுக்கு உண்மை தெரியும் என்றும், வெளியே சொல்லிக்கொள்ள அஞ்சுவதாகவும் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே 1,300 குழந்தைகளுக்கு தந்தையானது குறித்து விளக்கமளித்த அந்த அஞ்சலர், அந்த காலத்தில் கருத்தடை என்பது பிரபலமாகவில்லை என்றும், தற்போது இந்த விவகாரத்தில் தாம் வெட்கப்படவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
1960களில் தாம் பிரபல நடிகர் போன்று இருந்துள்ளதாகவும், பெண்களை கவரும் வசீகரம் தமக்கு இருந்ததாகவும் விசாரணை அதிகாரியுடம் தெரிவித்துள்ளார்.
இருப்பினும் இந்த 1,300 குழந்தைகளில் எவரும் குறித்த முதியவர் மீது வழக்கு தொடுக்கவோ அவரை களங்கப்படுத்தவோ முன்வரவில்லை எனவும் அந்த தனியார் விசாரணை அதிகாரி தெரிவித்துள்ளார்.
1,300 குழந்தைகளுக்கு ஒரே தந்தை! DNA பரிசோதனையில் அதிர்ச்சி கண்டுபிடிப்பு - இன்னும் பல திடுக்கிடும் உண்மைகள் அம்பலம்
Reviewed by மறத்தமிழன்
on
April 12, 2017
Rating: 5
Reviewed by மறத்தமிழன்
on
April 12, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.