April 30, 2017
லண்டன் - சீனா இடையே 12000 கி.மி ரயில் சேவை தொடங்கியது
சீனாவின் யிவு நகரத்தில் இருந்து லண்டனுக்கு இடையேயுள்ள தொலைவு சுமார் 7500 மைல்கல் அதாவது 12,000 கிலோ மீட்டர். லண்டன் - சீனா இடையேயான வர்த்தக போக்குவரத்தை ஊக்குவிக்கும் விதமாக இந்த நாடுகளுக்கு இடையே சரக்கு ரயில் திட்டம் கொண்டு வரப்பட்டது. எல்லா பணிகளும் முடிந்த நிலையில், முதல் முறையாக லண்டனில் இருந்து சீனாவுக்கு பயணித்திருக்கிறது சரக்கு ரயில்.
உலகின் அதிக தொலைவை கடக்கும் சரக்கு ரயில்களில் இது டாப் இடத்தில் இருக்கிறது. கடந்த ஏப்ரல் பத்தாம் தேதி, லண்டனில் இருந்து பீர், பால், மருந்துகள், மெஷின்கள் என பலவற்றையும் சுமந்து தடதடக்க ஆரம்பித்தது ஈஸ்ட் வின்ட் என பெயரிடப்பட்ட சரக்கு ரயில் . லண்டனில் இருந்து பிரான்ஸ், பெல்ஜியம், ஜெர்மனி, போலந்து, பெலாரஸ், ரஷ்யா, கஜகஸ்தான், வழியாக பயணித்து நேற்று சீனாவின் யிவு பகுதிக்கு ரயில் வந்தடைந்தது.
கப்பலில் இந்த தூரத்தை கடக்க வேண்டுமென்றால், இன்னும் முப்பது நாட்கள் தேவைப்படும், ஆனால் கப்பலில் 10 ஆயிரம் , 20 ஆயிரம் கண்டெயினர்கள் வரை சரக்கு எடுத்து வரலாம். ஆனால் இந்த ரெயிலில் 88 கன்டெயினர்கள் அளவுக்கு மட்டுமே சரக்கு எடுத்துவர முடிந்ததாக தகவல் வெளிவந்துள்ளது.
லண்டன் - சீனா இடையே 12000 கி.மி ரயில் சேவை தொடங்கியது
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
April 30, 2017
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
April 30, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.