April 25, 2017
ஒரே மாதத்தில் 10 கிலோ எடையைக் குறைக்க வேண்டுமா? இதோ ஓர் அற்புத வழி!
இங்கு டயட் மேற்கொள்ளாமல் மற்றும் கடுமையான உடற்பயிற்சி ஏதும் செய்யாமல் ஒரே மாதத்தில் 10 கிலோ எடையைக் குறைக்க உதவும் அற்புத வழி குறித்து கொடுக்கப்பட்டுள்ளது.
தற்போதைய வேலைப்பளுமிக்க உலகில், உடல் ஆரோக்கியத்தின் மீது கூட அக்கறை காண்பிக்க நேரமில்லாமல் பலரும் அவஸ்தைப்படுகிறோம். மேலும் நாள் முழுவதும் ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்வதால், உண்ணும் உணவுகள் சரியாக செரிமானமாகாமல், உணவுகளில் உள்ள கொழுப்புக்கள் உடலில் ஆங்காங்கு தங்கி உடல் எடையை அதிகரித்துவிடுகின்றன.
உடல் எடை அதிகரிப்பதால், பலரும் அதனைக் குறைப்பதற்கு டயட் மேற்கொள்கிறேன் என்று சரியாக சாப்பிடாமல், உடல் பருமனுடன், ஊட்டச்சத்து குறைபாட்டையும் சந்திக்க நேரிடுகிறது. உடல் எடையைக் குறைக்க வேண்டுமானால், டயட்டில் இருக்க வேண்டுமென்ற அவசியமில்லை. நல்ல ஆரோக்கியமான உணவுகளைத் தேர்ந்தெடுத்து சாப்பிட்டு வந்தாலே போதுமானது.
அதோடு, உடலின் மெட்டபாலிசத்தை அதிகரிக்கும் பானங்களையும் பருக வேண்டும். இக்கட்டுரையில் ஒரே மாதத்தில் 10 கிலோ எடையைக் குறைக்க உதவும் அற்புத பானம் குறித்து கொடுக்கப்பட்டுள்ளது.
தேவையான பொருட்கள்:
சுடுநீர் - 1 கப்
சீரகப் பொடி - 1 டீஸ்பூன்
பட்டைத் தூள் - 1/4 டீஸ்பூன்
இஞ்சி பவுடர் - 1/2 டீஸ்பூன்
எலுமிச்சை தோல் - 2 துண்டுகள்
தேன் - சுவைக்கேற்ப
செய்முறை #1
முதலில் கொதிக்கும் சுடுநீரில் தேனைத் தவிர, அனைத்துப் பொருட்களையும் சேர்த்து சிறிது நேரம் ஊற வைக்க வேண்டும்.
செய்முறை #2
மசாலாப் பொருட்கள் அனைத்தும் நீரில் நன்கு இறங்கி, பானம் சற்று குளிர்ந்ததும், அதில் தேன் சேர்த்து கலந்து வடிகட்டினால், பானம் தயார்.
பருகும் முறை:
உடல் பருமனால் கஷ்டப்படுபவர்கள், இந்த பானத்தை தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். இந்த பானத்தை தொடர்ந்து ஒரு மாதம் குடித்து வந்தால், உடல் எடையில் ஓர் நல்ல மாற்றத்தைக் காணலாம்.
குறிப்பு
உடலுழைப்பு இல்லாத எந்த ஒரு வாழ்க்கையும் உடல் பருமனுடன், உடல் ஆரோக்கியத்தையும் முழுமையாக அழித்துவிடும். எனவே எடையைக் குறைக்க வேண்டுமெனில், கட்டாயம் தினமும் குறைந்தது 45 நிமிட உடற்பயிற்சி மிகவும் அவசியமானது என்பதை மறவாதீர்கள்.
ஒரே மாதத்தில் 10 கிலோ எடையைக் குறைக்க வேண்டுமா? இதோ ஓர் அற்புத வழி!
Reviewed by மறத்தமிழன்
on
April 25, 2017
Rating: 5
Reviewed by மறத்தமிழன்
on
April 25, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)



No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.