March 29, 2017
சேது சமுத்திர கால்வாயில் ராமர் பாலம் குறித்த ஆய்வு:ICHR
இந்திய வரலாற்று ஆய்வுக் கழகமான ICHR சேது சமுத்திர கால்வாயில் ராமர் பாலம் குறித்த ஆய்வினை இவ்வருட இறுதிக்குள் நடத்தும் என்றும் ராமர் பாலம் என்று கூறப்படுவது இயற்கையாக அமைந்ததா இல்லை மனிதன் உருவாக்கியதா என்று ஆய்வு செய்யும் என்று கூறப்படுள்ளது.
இரண்டு மாத கால அவகாசம் எடுக்கும் இந்த ஆய்வு ஆக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் ICHR தெரிவித்துள்ளது. இதில் வெளியாகும் ஆய்வு முடிவை வைத்து மேற்கொண்ட ஆய்வு தேவையா என்பது குறித்து முடிவு செய்யப்படும் என்றும், தேவை என்றால் இதில் அரசின் உதவியும் கோரப்படும் என்று ICHR தலைவர் Y.சுதர்ஷன் ராவ் தெரிவித்துள்ளார்.
இந்த ஆய்வில் பல்கலைகழக வரலாற்று ஆசிரியர்கள் உட்பட 20 ஆய்வாளர்களை கொண்ட ஒரு குழு இதற்கென தேர்வு செய்யப்படும் என்று ராவ் தெரிவித்துள்ளார். மேலும் இதில் ASI கடல் ஆய்வாளர்களும் இதில் ஈடுபடுத்தப்படுவார்கள் என்று கூறப்பட்டுள்ளது.
இந்த ஆய்வு குறித்து ராவ் தெரிவிக்கையில், “இந்த ஆய்வில், ராமர் பாலம் எந்த அளவிற்கு இயற்கையாய் அமைந்தது என்றும் அதில் மனித தலையீடு இருந்துள்ளதா என்று ஆய்வு செய்யப்படும். இதில் நாங்கள் பொருட்களை கொண்ட ஆதாரங்களை தேடுவோம். உரிமம் பெற்ற எட்டு முக்குளிப்பவர்கள் இந்த ஆய்வுக் குழுவில் இருப்பார்கள்.” என்று கூறியுள்ளார்.
இதற்காக மே மாத இறுதியில் ஆய்வு அறிஞர்களுக்கான 15 நாள் பயிற்சி திட்டம் ஒருங்கினைக்கப்படும் என்றும் இந்த பயிற்சி இந்திய தொல்பொருள் ஆய்வு மைய முன்னாள் இயக்குனர் அலோக் திரிபாதி தலைமையில் நடைபெறும் என்று ராவ் கூறியுள்ளார்.
சேது சமுத்திர கால்வாயில் ராமர் பாலம் குறித்த ஆய்வு:ICHR
Reviewed by மறத்தமிழன்
on
March 29, 2017
Rating: 5
Reviewed by மறத்தமிழன்
on
March 29, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.