Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

March 8, 2017

ஜனாதிபதி கட்ஜூ: பிரதமர் கெஜ்ரிவால்: தமிழக முதல்வர் சகாயம் I.A.S! வைரலாகும் செய்தி!




இப்படி ஒரு செய்தி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மேற்கண்ட மூன்று பேர் மூன்று பதவிகளுக்கு நியமிக்கப்பட்டால் நன்றாக இருக்கும் என நினைக்கும் சிலர் இந்த செய்தியை சமூக வலைதளங்களில் பரப்பி வருகின்றனர்.
அந்த செய்தி பின்வருமாறு
ஜனாதிபதி கட்ஜூ: பிரதமர் கெஜ்ரிவால்: தமிழக முதல்வர் சகாயம் I.A.S!
” என்ன மக்களே, இந்த தலைப்பு  அதிர்ச்சியாகவோ, ஆச்சரியமாகவோ இருக்கிறதா..! இது நடக்குமா? நடந்தால் நமது மாநிலமும் தேசமும் எப்படிஎல்லாம் சுபிட்சம் அடையும் என்று கனவுகள் விரிகிறதா..?
ஆனால் நடக்கும் என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள். சரி எப்படி நடக்கும்..?
மாணவர்கள், இளைஞர்கள்  நினைத்தால் நடக்கும் அதுவும் இந்தியா எங்கும் உள்ள கோடான கோடி இளைஞர்கள் நினைக்க வேண்டும். தங்களது நெட் ஒர்க்கை பயன் படுத்த வேண்டும்.
வாட்ஸ் ஆப், முகநூல் மூலம் பேசிக்கொண்டு ஒன்றிணைய வேண்டும்..ஒரே அலைவரிசையில் யோசிக்க வேண்டும்.
குழுக்கள் அமைத்து அடிக்கடி சந்தித்துக்கொள்ள வேண்டும். அதன் பிறகு ஒரு பிரமாண்டமான ஒரு மாநாடு நடத்தி தங்கள் அரசியல் நிலைப் பாட்டை அறிவித்து முறைப் படி இந்த மூன்று பேரையும் தலைமை தாங்க பணிக்க வேண்டும்.
இதற்கு ஓரிரு வருடங்கள் பிடிக்கலாம். இது மட்டும் நடந்து விட்டால் இளைஞர்கள் விரும்பும் மாற்றம்  மிக எளிதாக நடந்து விடும்  என்கிறார்கள்.
அசத்தல்..! மாணவ செல்வங்களே..இளைஞர்களே நீங்கள் மனசு வைத்தால் நடக்காமல் இருக்குமா ..
செய்வீர்களா ?

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.