Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

March 6, 2017

நெடுவாசல் போராட்டம் தேவையற்ற ஒன்றாம் ... விடாது வம்பிழுக்கு இல. கணேசன்


ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து பொதுமக்கள் நெடுவாசலில் போரட்டம் செய்வது தேவையற்றது என்று ராஜ்யசபா எம்.பியும் , பாஜக மூத்த தலைவருமான இல. கணேசன் கூறியுள்ளார்.

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து பொதுமக்கள் நெடுவாசலில் போரட்டம் செய்வது தேவையற்றது என்று ராஜ்யசபா எம்.பியும் , பாஜக மூத்த தலைவருமான இல. கணேசன் கூறியுள்ளார். மேலும் விவசாயிகள் ஏன் தற்கொலை செய்கிறார்கள் என்பது புரியாத புதிராக உள்ளது என தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தூத்துக்குடியில் இல கணேசன் பேசியது :
தமிழக அரசியலில் தற்போது பல்வேறு மாற்றங்களை காண முடிகிறது. குறிப்பாக ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு பங்கேற்ற விழாவில் எதிர்கட்சியை சேர்ந்தவர்களும் பங்கேற்றது நல்ல மாற்றத்தைக் காட்டுகிறது. மேலும் சிறையில் இருந்து சசிகலாவிடம் இருந்து வரும் உத்தரவை செயல்படுத்தாமல் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு மக்களுக்காக செயல்படவேண்டும்.

புரியாத புதிராக உள்ளது.
விவசாயிகள் ஏன் தற்கொலை செய்கிறார்கள் என்பது புரியாத புதிராக உள்ளது. விவசாயிகளுக்காக மத்திய அரசு கொண்டு வந்துள்ள பயிர் காப்பீட்டு திட்டத்தில் தஞ்சை மாவட்டத்தில் மட்டும் 95 சதவீதம் பேர் இணைந்துள்ளனர். இதனால் வறட்சி பாதித்த விவசாயிகள் மத்திய அரசின் பயிர் காப்பீட்டு திட்டத்தில் இணைந்து பயன் பெறலாம்.

நெடுவாசல் போராட்டம் தேவையற்றது
நெடுவாசல் போராட்டம் தேவையற்றது. தமிழகத்தில் மட்டும் எரிவாயு எடுக்கப்படுவதாக கூறப்படுவது தவறு. அருணாசல பிரதேசம், குஜராத், அஸ்ஸாம்,. ஆந்திரா, புதுச்சேரி உள்ளிட்ட இடங்களிலும் எரிவாயு எடுக்கப்படுகிறது. இந்த பிரச்சனையில் விவசாயிகளை சிலர் தூண்டி விட்டு வேடிக்கை பார்க்கின்றனர்.

திமுக நாடகம் ஆடுகிறது
இதற்கான அனுமதி முந்தைய ஆட்சி காலத்தில் கொடுக்கப்பட்டது. பிள்ளையை கிள்ளி விட்டு சிலர் தொட்டிலையும் ஆட்டுகின்றனர்.

தண்ணீர் எடுக்க அனுமதிக்ககூடாது
எதற்கெடுத்தாலும் மோடியை குறை கூறுவது தவறு. குடிக்க தண்ணீர் இல்லாத நிலையில் பெப்சி, கோக் கம்பெனிகளுக்கு தாமிரபரணியில் தண்ணீர் எடுக்க அனுமதிக்க கூடாது. இதை பாஜக கண்டிக்கிறது. இவ்வாறு இல. கணேசன் கூறினார்

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.