பலத்த எதிர்ப்புக்கு மத்தியில், கடந்த 24-ம் தேதி கோவை வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் இருக்கும் ஈஷா யோகா மையத்தில் அமைக்கப்பட்டுள்ள ஆதியோகி சிலையை இந்திய பிரதமர் நரேந்திர மோடி திறந்துவைத்தார். ஈஷா யோகா மையம், பல விதிமுறைகளை மீறி இந்த சிலையை நிறுவியது என்று பல்வேறு சுற்றுச்சூழல் அமைப்புகள் குற்றம்சாட்டி வருகின்றன. இந்நிலையில் நேற்று தமிழக அரசு, ஆதியோகி சிவன் சிலை, மூன்று மண்டபம் கட்ட ஒரு லட்சம் சதுர அடி அளவை ஈஷா யோகா மையம் ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்தது. பழங்குடியினர் பாதுகாப்புச் சங்கத் தலைவர் ஈஷா மையத்துக்கு எதிராகத் தொடர்ந்த வழக்கில் தமிழக அரசு இவ்வாறு வாதிட்டது.
இதையடுத்து தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் ஈஷா யோகா மையத்தின் நிறுவனர் ஜக்கி வாசுதேவ், 'ஈஷா யோகா மையத்துக்கு எதிராக இருக்கும் குற்றச்சாட்டுகளில் ஒன்றை நிரூபித்தால் கூட, நான் அனைத்திலும் இருந்து விலகிக் கொள்கிறேன்', என்று கூறியுள்ளார்.
ஜக்கி வாசுதேவ் மேலும், 'பல குழுக்கள் அவர்களுக்கான ஒரு குறிப்பிட்ட கொள்கைகளுடன் இயங்குகிறார்கள். அவர்கள் சுற்றுச்சூழல் சார்ந்த இயக்கங்களாக காட்டிக் கொள்கிறார்கள். அவர்கள் சுற்றுச்சூழலுக்கு எதிராக செய்து வந்த நடவடிக்கைகளை நிறுத்தினேன். நான் அப்படி அவர்களின் நடவடிக்கைகளை நிறுத்தியபோது, எனக்கெதிராக ஊடகங்கள் செயல்பட்டதை நீங்கள் பார்த்திருக்க வேண்டும். அனைத்துவிதமான குற்றச்சாட்டுகளும் என் மீது சுமத்தப்பட்டன. இந்த குற்றச்சாட்டுகளில், ஒரேயொரு விஷயத்தை நிரூபித்தால் கூட நான் விலகிக் கொள்கிறேன்.' என்று அந்த நேர்காணலில் பேசியுள்ளார்.


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.