Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

March 26, 2017

பயிர்வாடிய சோகத்தில் விவசாயி மாரடைப்பில் மரணம்! தொடரும் அவலம்


சேலம், ஓமலூர் அருகே உள்ள பாகல்பட்டி என்ற கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி பழனிசாமி. இவருக்கு சொர்ணம்மாள் என்ற மனைவியும், அருள் என்ற மகனும், தேவி என்ற மகளும் உள்ளனர்.

பல தலைமுறையாக விவசாயம் மட்டுமே தொழிலாக கொண்டு வந்த பழனிசாமி தனக்கு சொந்தமான நான்கு ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்தும், ஆடு மாடுகளை வைத்து பால் விற்பனை செய்து வந்தார்.

மேலும் பால் கூட்டுறவு சங்கத்தில் இயக்குனராகவும் இருந்து வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளாக வறட்சி காரணமாக இவரின் நிலத்தில் பயிர்கள் வாடியதால் , குறைவான நீரை கொண்டு வளரும் தென்னை,மா மற்றும் யூக்கலிப்டஸ் மரங்களை பயிரிட்டு வருவாய் ஈட்டி வந்தார்.

இந்நிலையில் கடந்த ஒரு வருடமாக மழை முழுவதுமாக பொய்த்து விட்டதால், கிணற்றில் தண்ணீர் இல்லாததால், தன்னிடம் இருந்த ஆடு மாடுகளை விற்று அதன் மூலமாக கிடைத்த பணத்தில் நீரை வாங்கி பயிர்களை வளர்த்து வந்தார்.

ஆனாலும் போதுமான தண்ணீர் இல்லாமல் தென்னை,யூக்ளிடிப்ஸ் மரங்கள் காய்ந்தன. இதனால் கடந்த சில நாட்களாக மனமுடைந்து வேதனையில் இருந்தாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று காலை விவசாயி பழனிசாமி திடீரென மாரடைப்பால் மரணம் அடைந்தார். 62 வயதானாலும் நல்ல உழைப்பாளியாக இருந்து வந்த விவசாயி பழனிசாமி விவசாயம் பொய்த்து போனதால் மாரடைப்பால் மரணம் அடைந்த சம்பவம் அந்த பகுதி விவசாயிகள் இடையே கடும் அதிர்ச்சியை எற்படுத்தியுள்ளது.

விவசாயி பழனிசாமியின் மரணம் குறித்து  தமிழக விவசாய சங்கத்தின் தலைவரும், விவசாயியின் உறவினருமான பெரியண்ணன் கூறும் போது மழை இல்லாததால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றார்கள் என்றும், இது போன்று வறட்சியின் காரணமாக உயிர் இழக்கும் விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்குவதை விட்டு விட்டு, நதிகளை தேசியமயமாக்க மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.