Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

March 7, 2017

நெடுவாசல் போராட்டத்தை திசை திருப்ப சதி... இளைஞர்களே கவனம்


புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 20 நாட்களாக போராட்டம் நடைபெறுகிறது. இந்த போராட்டத்தை முறியடிக்க மத்திய அரசு பல முயற்சிகளை செய்து வருகிறது. மாநில அரசும் மாவட்ட நிர்வாகமும் பல கட்ட பேச்சு வார்த்தை நடத்தியும் போராட்டத்தை முறியடிக்க முடியவில்லை.

சமூக வலைத்தளங்களில் நெடுவாசல் போராட்டத்தை நமத்துப்போகச் செய்யும் வகையில் ஆபாச புகைப்படங்களை அரங்கேற்றுகின்றனர். எனவே இளைய தலைமுறையினர், சமூக வலைத்தளவாசிகள் தங்களின் கவனத்தை திசை திருப்பவேண்டாம் என்றும் பலரும் பதிவிட்டுள்ளனர்.
நெடுவாசல் போராட்டத்தில் மட்டுமே கவனம் செலுத்துங்கள் சுசீ லீக்ஸ் பற்றி கருத்தில் கொள்ள வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டுள்ளனர்.

விவசாயிகளின் கண்ணீர்
நாங்க வேணும்னா டிரஸ் இல்லாத போட்டோ போடட்டுமா? என்று விவசாயிகள் கேட்பது போல மீம்ஸ் பதிவிட்டுள்ளனர்

திசை திருப்ப சதி
நெடுவாசல் போராட்டத்தை திசை திருப்ப சதி
பட்டினி தேசமாகும்
நெல் விளையும் தேசத்தில் ஹைட்ரோகார்பன் திட்டத்தை அனுமதித்தால் சோமாலியா போல நமது மாநிலம் பஞ்சம் பட்டினி தேசமாக மாறும் எச்சரித்துள்ளார் ஒரு வலைஞர்

மத்திய அரசுக்கு அழுத்தம்
மக்கள் அனைவரும் சேமிப்புக் கணக்கில் உள்ள பணத்தை திரும்பப் பெறும் போராட்டத்தை தொடங்குங்கள். இதன் மூலம் மத்திய அரசுக்கு அழுத்தம் தரமுடியும் என்று வலியுறுத்தியுள்ளார் ஒரு வலைஞர்.

விவசாயியின் உயிர்
விவசாயியின் உயிர் மீதுதான் ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கான குழாய் இறக்கப்படுகிறது என்று சொல்லாமல் சொல்கிறார் இந்த இளைஞர்.

எத்தனை திசை திருப்பல்
சென்னை வெள்ளத்தின் போது பீப் பாடல் வெளியானது, ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது அனிருத் வீடியோ வெளியானது. இப்போது நெடுவாசலை திசை திருப்ப சுசீ லீக்ஸ் இன்னும் எத்தனையை எத்தனை திசை திருப்பல்கள் என்று கேட்கின்றனர் சமூக வலைத்தளவாசிகள்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.