Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

March 22, 2017

பழங்கள் சாப்பிடுங்க.. நோய்களை தூர விரட்டுங்க..!!


நமது உடலில் 80 சதவீதம் நீர் உள்ளது. அதேபோல பழங்களிலும் 80சதவீதம் நீர் இருக்கிறது. நாம் சாப்பிடும் உணவில் நீர்ச்சத்து அதிகம் உள்ள உணவை உட்கொள்வது நல்லது. நீர்ச்சத்து பழங்கள் மற்றும் காய்கறிகளில் அதிகம் உள்ளன.

உடலில் சேரக்கூடாத கெட்ட கொழுப்புகள் இல்லாத உணவுப்பொருட்கள் பழங்களும், காய்கறிகளும்தான். ஆனால் பால் மாமிசம் போன்ற பொருட்களில் கொழுப்பு ªந்து காணப்படுவதுடன் உடலுக்கு தேவையற்ற கொழுப்பும் உள்ளது.

மூளை சுறுசுறுப்புடன் செயல்பட பழங்களில் உள்ள வைட்டமின்கள் துரிதமான தூண்டுதல் காரணியாக உள்ளது. மேலும் பழங்கள் மூளைக்கு நேர்மறை அதிர்வுகளை தருகிறது.

பழங்கள் சாப்பிடுவதால் ஞாபக சக்தி அதிகரிக்கிறது. ஆகவே குழந்தைகள்,மாணவர்கள் அதிகமாக பழ வகைகளை சாப்பிட வேண்டும். பழங்களில் நார்ச்சத்து,நீர்ச்சத்து, வைட்டமின் சி போன்றவைகள் செரிந்து காணப்படும்.


இதனால் உடலுக்கு ஏற்படக்கூடிய நோய்கள் முற்றிலும் தடுக்கப்படுகிறது. கண் நோய்கள்,மாரடைப்பு,ஞாபக மறதி போன்றவை எளிதில் அணுகாது. நோய் வராமல் தற்காத்துக்கொள்ள பழங்கள் ஒரு வரப்பிரசாதமாகும்.
Ðழங்களை விலை அதிகம் என்று நாம் எண்ணுவது அறியாமை ஆகும். நாம் ஆஸ்பத்திரி சென்று நோய்களுக்கு வாழ்க்கை முழுவதும் செலவளிப்பதை ஒப்பிடும்போது பழங்களுக்கு செலவளிப்பது குறைவான செலவே என்பதை நாம் உணர வேண்டும்.

பழங்களை பழச்சாறாகவும் உட்கொள்ளலாம். ஆனால் பாட்டிலில் அடைக்கப்பட்டவைகளைவிட நேரடி பழச்சாறுகள் நன்மை பயப்பன.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.