Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

March 14, 2017

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்; தமிழ்நாடு இளைஞர் கட்சியின் வேட்பாளர் அறிவிப்பு


தமிழர்களின் பராம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு தடையை நீக்கக்கோரி தமிழகம் முழுவதும் இளைஞர்களும் மாணவர்களும் அறப்போராட்டத்தில் குதித்து மத்திய, மாநில அரசுகளை திரும்பிப்பார்க்க வைத்தனர். அதில் வெற்றியும் கண்டு ஜல்லிக்கட்டை நடத்த வித்திட்டனர்.
இதனைத்தொடர்ந்து, மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்திசெய்யும் வகையில் ஜல்லிக்கட்டு இளைஞர்களின் சார்பாக தமிழ்நாடு இளைஞர் கட்சியை உருவாக்கினர். இந்த கட்சிக்கு உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகி தேர்வும் நடத்தப்பட்டது.
இந்நிலையில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவையொட்டி, அவரின் சட்டசபை தொகுதியான ஆர்.கே.நகர் காலியாக இருந்து வந்தது. இந்த தொகுதிக்கு தற்போது இடைத்தேர்தல் அறிவித்த நிலையில், தமிழ்நாடு இளைஞர் கட்சி சார்பில் வேட்பாளரை களமிறக்கியுள்ளனர்.
வேட்பாளராக காமேஸ்வரன் என்பவரை முன்நிறுத்த உள்ளனர். இவர் எம்பிஏ பட்டப்படிப்பை முடித்தவர். விரைவில் பத்திரிகையாளர் சந்திப்பில் வேட்பாளரை அறிமுகம் செய்யவுள்ளது குறிப்பிடத்தக்கது.
இளைஞர் சக்தி அரசியலில் களமிறங்க அஸ்திவாரம் போட்டுவிட்டனர் என்பதை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் இருந்து தமிழகத்திற்கு உரத்து கூற தொடங்கிவிட்டனரோ?

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.