March 3, 2017
நெடுவாசல் கிராம மக்கள் சந்திப்பு திருவாரூர் மாவட்டம் முத்துப்பட்டை சேர்ந்த கருப்பு முருகானந்தம் தகவல்
எரிவாயு திட்டத்தில் உள்ள பிரச்சினைகள் குறித்து மதுரையில் இன்று மத்திய அமைச்சர், பாஜக தலைவர்களுடன் நெடுவாசல் பகுதி மக்கள் சந்தித்து பேசுகின்றனர் என்றார் பாஜக மாநில பொதுச்செயலாளர் கருப்பு முருகானந்தம்:
புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் நடைபெற்ற எரிவாயு திட்டத்துக்கு எதிரான போராட்டத்தில் மேலும் அவர் பேசியது.
’’நானும்தனிமனிதனாக முடிவெடுத்து வரவில்லை.. மத்தியில் ஆட்சி செய்து கொண்டிருக்கக்கூடிய, பாஜகவின் நிர்வாகியாகத்தான் வந்துள்ளேன்.
இந்த எரிவாயு திட்டம் தமிழக மக்களுக்கு, விவசாயத்துக்கு, விவசாயிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதாக இருந்தால் இந்த திட்டம் செயல்படுத்தப்படமாட்டாது என்பதுதான் பாஜகவின் நிலைப்பாடு. இதைத்தான் மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சரும் தெரிவித்துள்ளார்.
பாதிப்பு ஏற்படுத்துவதை உறுதி செய்யும் வகையில் ஆய்வு அறிக்கை தயாரித்து இருப்பதாக இந்தக் கிராமத்தைச் சேர்ந்த சிலர் என்னிடம் தெரிவித்துள்ளனர்.
இந்த திட்டம் விவசாயத்தை பாதிக்கும் என்று நான் நம்புகிறேன். அதேசமயம், இந்த திட்டம் எந்த அளவிற்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று எந்த அரசியல் வாதிகளுக்குமே தெரியாது.
தெரிந்திருந்தால் ஒரு நேரத்தில் இந்த திட்டத்துக்கு அனுமதி கொடுத்திருக்க மாட்டார்கள், ஆகையால், மீண்டும் ஆய்வு செய்து, மக்களிடம் கருத்து கேட்கப்படும். அப்போது, மக்கள் ஏற்கவில்லை என்றால் இந்த திட்டம் ரத்து செய்யப்படும்.
ஏதோ அரசியல் கட்சிகள் கூறுவதனால் போராட வேண்டாம். ஆக்கப்பூர்வமாக அறிவியல் பூர்வமாக பாதிப்பு இருக்கிறதா என்பதை சிந்தித்துப் பார்த்து தெளிவுபடுத்தி உறுதியாக இந்த திட்டம் வேண்டாம் என்று சொன்னால் கைவிட்டுவிடுகிறோம் என்று மத்திய அமைச்சர் கூறி இருக்கிறார்.
நாளை மாலை 3 மணிக்கு மதுரையில் பாஜகவைச் சேர்ந்த தலைவர்களையும், மத்திய அமைச்சரையும் இந்தக் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் சந்திப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முதல்கட்டமாக இந்த சந்திப்பின் மூலம் பாதிப்பை அவர்களிடம் தெரிவிக்க உள்ளனர்.
அதற்கடுத்ததாக 3 தினங்களுக்குள் மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சரை சந்திக்கவும் பாதிப்பு ஏற்படுத்தும் என்பதை அறிந்து அதன் மூலம் இந்த திட்டத்தை ரத்து செய்து இப்பகுதியை பாதுகாக்க பாஜக அரசு உறுதுணையாக இருக்கும்’’ என்றார்.
அதில், “தஞ்சையைச் சேர்ந்த பா.ஜ.க.வின் மாநில இளைஞரணிச் செயலாளர் ‘கருப்பு (எ) முருகானந்தம் தஞ்சையைச் சேர்ந்தவர். இவர்’ மீது மதக் கலவரம் ஏற்படுத்துவது, சிறுபாண்மையினர் மீது வன்முறை பிரயோகிப்பது, கொலைகள் செய்வது உட்பட 38 வழக்குப் பதிவுகளும், அதில் 20 வழக்குகள் விசாரணையிலும் உள்ளன. கிட்டத்தட்ட 40 பேர்கள் வரை படுகொலை செய்தவர். சமீபத்தில் நடைப்பெற்ற தேர்தலில் தஞ்சாவூர் மக்களவைத் தொகுதியில் பாஜக வேட்பாளராக நிறுத்தப்பட்டார்.
இந்த கருப்பு முருகானந்தத்தின் கூலிப்படையை நிர்வகிப்பது, அப்படைக்கு ஆள் சேர்ப்பது, பெண்களை சப்ளை செய்வது போன்ற பங்களிப்பைச் செய்து வருபவர் தென்காசியைச் சேர்ந்த தங்கதுரை. இவர் பா.ஜ.க, விடுதலை சிறுத்தைகள் கட்சிகளில் செயல்பட்டு தற்போது இந்து முன்னணியில் இயங்கி வருகிறார்.
நெடுவாசல் கிராம மக்கள் சந்திப்பு திருவாரூர் மாவட்டம் முத்துப்பட்டை சேர்ந்த கருப்பு முருகானந்தம் தகவல்
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
March 03, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.