March 8, 2017
சாணக்கியரின் (சோ) மரணத்திலும் மர்மம்... குமுறும் உறவுகள்.. வெடிக்க காத்திருக்கும் புதிய எரிமலை!!
தமிழக 'சாணக்கியரி'ன் மரணத்திலும் மர்மம் இருப்பதாக அவரது உறவினர்கள் குமுறி வருகின்றனர். விரைவில் இந்த சர்ச்சையும் எரிமலையாக வெடிக்க காத்திருக்கிறதாம்.
சென்னை: தமிழகத்தின் அதிமுக்கிய தலைவரின் மர்ம மரணம் விஸ்வரூபமெடுத்திருக்கிறது.. அதேபோல 'சாணக்கியரி'ன் மரணத்திலும் மர்மம் இருப்பதாக உறவுகள் குமுறி வருகின்றனர். விரைவில் 'சாணக்கியரின்' மரண சர்ச்சை புதிய எரிமையாக வெடிக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதிமுக்கிய தலைவரின் மரணத்தில் நாளுக்கு நாள் சந்தேகங்களும் விடை தெரியாத கேள்விகளும் நீண்டு கொண்டே போகின்றன. இந்த சந்தேகங்களுக்கு தரப்படும் விளக்கங்கள்தான் பல விவகாரங்களை கிளப்பிக் கொண்டே இருக்கின்றன.
அடுத்தடுத்து மரணம்
அந்த அதிமுக்கிய தலைவர் மறைந்த அதே மருத்துவமனையில் இரண்டாவது நாளே 'சாணக்கியர்' மரணமடைகிறார். அவர் நீண்டகாலம் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டவர்தான்... ஆனாலும் அதிமுக்கிய தலைவர் மர்ம மரணம் நிகழ்ந்த இரண்டு நாட்களிலேயே சாணக்கியரும் மறைந்தது சர்ச்சையாக கிசுகிசுக்கப்பட்டது.
ஜீரணிக்க முடியாத நிலையில்...
ஆனால் சாணக்கியரின் உறவுகளால் இந்த திடீர் மரணம் ஜீரணிக்க முடியாத ஒன்றாகவே இருக்கிறதாம். இது தொடர்பான குமைச்சல் சாணக்கியரின் உறவுகளிடத்தில் இருந்து வருகிறதாம்.
கையிலெடுத்த மாஜி அதிகாரி
இந்த விவகாரம் மிக முக்கியமான மாஜி பெண் ஐஏஎஸ் அதிகாரியின் காதுகளுக்குப் போயிருக்கிறது.. தம்மை சீரழித்த அந்த கும்பலை பழிதீர்க்க துடியாக துடிக்கிறாராம் அந்த மாஜி அதிகாரி.
தடுத்த ஏகாம்பரம்
ஆனால் அவருடன் இருக்கும் எல்லாம் தெரிந்த ஏகாம்பர வாத்தியாரோ, மாஜி அதிகாரியை கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டு வாய் திறக்கவிடாமல் செய்து கொண்டிருக்கிறாராம்.. என்னதான் ஏகாம்பரம் தடுத்தாலும் எரிமலை வெடிக்கப் போவதென்னவோ நிச்சயம் என்கின்றனர் சாணக்கியரின் உறவுகள்.
சாணக்கியரின் (சோ) மரணத்திலும் மர்மம்... குமுறும் உறவுகள்.. வெடிக்க காத்திருக்கும் புதிய எரிமலை!!
Reviewed by மறத்தமிழன்
on
March 08, 2017
Rating: 5
Reviewed by மறத்தமிழன்
on
March 08, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.