March 11, 2017
ஆர்கே.நகரில் எனக்கு நல்ல பிரகாசமான வாய்ப்பு உள்ளது... சொல்கிறார் தீபா!
ஆர்கே.நகரில் தனக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருப்பதாக ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா தெரிவித்துள்ளார். கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசித்து நிர்வாகிகளின் பட்டியல், கட்சியின் சின்னம் குறித்து விரைவில் அறிவிப்பேன் என்றும் அவர் கூறினார்.
ஆர்கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடவுள்ளதாக அறிவித்துள்ள ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது ஜெயலலிதாவின் வாரிசாக பொதுமக்கள் என்னை தேர்வு செய்வார்கள் என தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் பேசியதாவது, உண்மையான அ.தி.மு.க. தொண்டர்களும், பொது மக்களும் சசிகலா தலைமையை ஏற்கவில்லை. ஆர்.கே. நகர் தொகுதி ஜெயலலிதாவின் கோட்டை ஆகும்.
அங்கு வேறு யாருக்கும் இடம் கிடையாது. ஜெயலலிதாவின் வாரிசாக பொதுமக்கள் என்னை தேர்வு செய்வார்கள். என் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.
கட்சி நிர்வாகிகள் பட்டியல், கட்சியின் சின்னம் பற்றி மூத்த நிர்வாகிகளுடன் ஆலோசித்து விரைவில் அறிவிப்பேன். இவ்வாறு அவர் கூறினார்.
ஆர்கே.நகரில் எனக்கு நல்ல பிரகாசமான வாய்ப்பு உள்ளது... சொல்கிறார் தீபா!
Reviewed by மறத்தமிழன்
on
March 11, 2017
Rating: 5
Reviewed by மறத்தமிழன்
on
March 11, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.