Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

March 23, 2017

ஆர். கே. நகரில் சசி அணிக்கு தொப்பி, ஓபிஎஸ் அணிக்கு இரட்டை விளக்கு மின் கம்பம் சின்னம்!


ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் சசிகலா அணி சார்பில் போட்டியிடும் டிடிவி தினகரனுக்கு தொப்பி சின்னம் ஒதுக்கி தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. ஓபிஎஸ் அணிக்கு இரட்டை விளக்க மின் கம்பம் ஒதுக்கியுள்ளது
.
இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டதை அடுத்து ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் போட்டியிடும் டிடிவி தினகரனுக்கு தொப்பி, கிரிக்கெட் பேட், ஆட்டோ ரிக்ஷா ஆகிய மூன்று சின்னங்களில் ஏதாவது ஒன்றை ஒதுக்கக் கோரி தேர்தல் ஆணையத்திடம் பட்டியல் அளிக்கப்பட்டது. சசிகலா அணிக்கு தேர்தல் ஆணையம் ஆட்டோ ரிக்சா சின்னத்தை ஒதுக்கியது. அதை ஏற்க மறுத்ததை அடுத்து தொப்பி சின்னத்தை சசிகலா அணிக்கு தேர்தல் ஆணையம் ஒதுக்கியது.
ஓபிஎஸ் அணி சார்பில் போட்டியிடும் மதுசூதனனுக்கு இரட்டை விளக்கு மின் கம்பம் சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது.
ஜெயலலிதா மறைவிற்குப் பிறகு காலியாக உள்ள ஆர்.கே. நகரில் எப்ரல் 12ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. ஓபிஎஸ் அணி, சசிகலா அணியினர் இரட்டை இலை சின்னத்தை கேட்டு மல்லுக்கட்டின.


இரட்டை இலை சின்னத்தை யாருக்கு ஒதுக்குவது என்பது குறித்து சசிகலா மற்றும் ஓ.பி.எஸ் ஆகிய அணிகளிடம் விசாரணை நடத்திய இந்திய தேர்தல் ஆணையம் ஐந்து அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது.

இரட்டை இலை
இரட்டை இலை சின்னம் யாருக்கும் கிடையாது. சின்னம் முடக்கப்படுகிறது.ஒரு அணிகளும் அதிமுக என்ற பெயரை பயன்படுத்தக் கூடாது என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

  85 சின்னங்கள்
தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ள 85 சின்னங்களில் ஏதாவது மூன்று சின்னங்களை இரு அணிகளும் தங்களுக்கு தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும். இது குறித்த தகவலை வியாழக்கிழமை காலை 10 மணிக்குள் தேர்தல் ஆணையத்திடம் தெரிவிக்க வேண்டும்.

அதிமுக அம்மா
தேர்தல் ஆணையத்தின் உத்தரவினை அடுத்து சசிகலா அணி சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது. கட்சியின் பெயரை அதிமுக அம்மா என்று அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளது. இதனையடுத்து அதிமுக அம்மா என்ற கட்சியும் ஏற்கப்பட்டுள்ளது

தொப்பி, கிரிக்கெட் பேட், ஆட்டோ
சசிகலா அணி சார்பில் சுயேட்சை சின்னங்கள் அடங்கிய பட்டியல் அடங்கிய மனுவை அளித்துள்ளது. ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் தங்கள் அணியில் சார்பாக போட்டியிடும் வேட்பாளர் டிடிவி தினகரனுக்கு தொப்பி, கிரிக்கெட் பேட், ஆட்டோ ரிக்ஷா சின்னம் ஒதுக்க கோரி தேர்தல் ஆணையத்திடம் சசிகலா அணி மனு அளித்தது


ஆட்டோவிற்கு பதில் தொப்பி
ஆர்.கே. நகரில் சசிகலா அணியின் சார்பில் போட்டியிடும் டிடிவி தினகரனுக்கு ஆட்டோ ரிக்சா சின்னம் ஒதுக்கி தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. ஆனால் தங்களுக்கு தொப்பி சின்னம் வேண்டும் என்று சசிகலா அணி சார்பில் மீண்டும் கோரிக்கை வைக்கப்பட்டது. இதனை ஏற்று தொப்பி சின்னத்தை சசிகலா அணிக்கு தேர்தல் ஆணையம் ஒதுக்கியது.


இரட்டை மின் கம்பம்
இதே போல ஓபிஎஸ் அணி சார்பில் சின்னங்கள் ஒதுக்கக் கோரி 3 சின்னங்கள் அடங்கிய பட்டியலை அணித்தன. இரட்டை விளக்க மின் கம்பம் ஒதுக்கி தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. ஓபிஎஸ் அணிக்கு அஇஅதிமுக புரட்சித்தலைவி பெயரை ஒதுக்கியுள்ளது.


ஓபிஎஸ் அணி ஏற்பு
இதேபோல ஓபிஎஸ் அணி கேட்டது போல இரட்டை விளக்கு மின் கம்பம் சின்னத்தையும், அஇஅதிமுக புரட்சித்தலைவி என்ற கட்சியின் பெயரையும் தேர்தல் ஆணையம் ஒதுக்கியதால் அந்த அணியினர் உற்சாமடைந்துள்ளனர்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.