March 5, 2017
தீபாவுடன் கருத்து வேறுபாடு? கணவர் மாதவன் விவாகரத்து?
ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா அரசியல் பிரவேசம் செய்வதாக கூறினார். அவருக்கும் ஓரளவு தொண்டர்களின் ஆதரவும் இருந்து வந்தது. இந்நிலையில் ஜெயலலிதாவின் பிறந்த நாளன்று எம்.ஜி.ஆர் – அம்மா – தீபா பேரவை என்ற ஒன்றை தொடங்கினார்.
இந்த அமைப்பின் மீது தொண்டர்களுக்கு அவ்வளவாக விரும்பமும்இல்லை.
அரசியல் கட்சியாக தொடங்கப்பட வேண்டிய இந்த அமைப்பு பலரது தவறான வழிகாட்டுதல்களால் பேரவையாக உதயமாகியுள்ளது என்று தொண்டர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.
இந்நிலையில் சமீபத்தில் பேரவைக்கு நியமிக்கப்பட்ட நிர்வாகிகள் பேரவைக்கு அப்பாற்பட்டவர்கள் என்று தீபாவின் கணவர் மாதவன் குற்றம்சாட்டியுள்ளார். தீபாவுக்கு கார் டிரைவராக இருந்த ராஜாவை செயலாளராகவும், அவரது மனைவியை தலைவராகவும் நியமித்தார்.
நிர்வாகிகள் நியமனத்தில் கணவன் மாதவனுக்கும் மனைவி தீபாவுக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் பல நாட்கள் இருவருக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டதாகவும் தெரிகிறது. இதில் மாதவன் பெரிதும் விரக்தி அடைந்திருந்ததாகவும் கூறுகிறார்கள்.
இந்த சூழலில் கணவரே தீபாவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ளமை பேரவையின் நம்பிக்கைத்தன்மையை இழக்கச்செய்துள்ளது. தொண்டர்களின் கூட்டம் மெல்ல குறையத்தொடங்கிவிட்டது.
தீபா பல விஷயங்களில் தன்னிச்சையாக செயல்படுவதாக குற்றம்சாட்டிய அவரது கணவர் மாதவன் தனக்கும் பேரவைக்கும் இனி எந்த தொடர்பும் கிடையாது என்று அறிவித்துள்ளார்.
அவர் அவரது நண்பர்கள் உதவியுடன் ஒரு வழக்கறிஞரை சந்தித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. இதனால் அவர் விரைவில் விவாகரத்து நோட்டீஸ் அனுப்பினாலும் ஆச்சர்யப்பட ஒன்றும் இல்லை என்று அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Related Topics : Tamilnadu News
தீபாவுடன் கருத்து வேறுபாடு? கணவர் மாதவன் விவாகரத்து?
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
March 05, 2017
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
March 05, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.