Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

March 3, 2017

நெடுவாசலும் நின்று காட்டும்!


.
...........................மோகனசுந்தரம்.........

எங்ககாடு கழனியை அழித்தொழித்து ஹைட்ரோகார்பன் எடுப்பதுதான் ஏனடா-

வளங்களெல்லாம் இழந்த பின்பு
மக்கள் நலன்கள் ஏதடா?
மக்கள் நலன்கள் ஏதடா?

நம்மைப்போல ஒருவனென்று நாமக்கட்டிகள்
நகைத்திடும்- தன்மைகொண்ட தமிழனென்று எண்ணிவந்தவன் எவனடா? கருத்தினை திருத்திக்கொண்டு வந்தவழியே செல்லடா-
வந்த வழியே செல்லடா!

வெந்தசோற்றை தின்றுதீர்த்து விதி
வந்தப்பின்பு செத்துப்போக நொந்துபோன
மனிதரல்ல- நாங்கள் சிந்தை
தெளிந்த கூட்டமென்று உணர்த்துவோமடா!
உமக்கு உணர்த்திடுவோமடா!!

எங்கநாட்டு வளங்களெனும் கவசமணி குண்டலங்கள் யாசம்கேட்கும் கண்ணனுக்கு      கழற்றியே கொடுத்துவிட்டு கண்மூடியேமாற
கர்ணன் அல்ல நாங்கடா!
கர்ணனல்ல நாங்கடா!!

தேசம் தேசம் என்று சொல்லி
நாசமே செய்வதா? நீ
வேஷம்போட்டு மோசம் செய்ய
எங்க வம்சம் சாவதா?
எங்க வம்சம் மாள்வதா?

வளங்களெல்லாம் இழந்த பின்பு
வாழும் மனிதர் யாரடா?
நிலங்கள் காக்கும் படைகளென
களங்கள் காண எழுவோமடா!
களங்கள் காண வருவோமடா!!

விடுதலைக்கு உயிரைத் தந்து
ஈகம் செய்த நாடடா-
தமிழனுயிர் காக்கமட்டும் மறுப்பது
ஏனடா? நீங்கள் மறப்பதேனடா?
-வெறுப்பதுதான் ஏனடா?

மேகத்தாட்டு முல்லைப்பெரியார் காவிரி
உரிமைகாத்து- கூடங்குளம் ஈழத்தமிழர்
இன்னல் தீர்க்க யெழுந்துவந்த
நேசமுள்ள தேசபக்தன் எவனடா?அங்கு
பாசமிக்க தேசபக்தன் பதுங்கிநின்றதேனடா?

திருடுமுன் மயக்கிடவே நாட்டுப்பண் இசைக்கிறாய் -சிந்தனையைத் திருப்பிடவே
நாட்டுப்பற்றை யுரைக்கிறாய் வருடியெங்கள்
தலைதடவ தேசியக்கொடி அசைக்கிறாய், கவனத்தை நீ கலைக்கிறாய்...!

இந்தவேலை இங்கே வேண்டாமென
அண்டைநில மக்களால் அகற்றப்பட்ட
திட்டமெல்லாம் இளிச்சவாயன் தமிழன்
தலையில் கொட்டிடவோ நினைக்கின்றாய்?
தலையை மொட்டையடிக்க நிற்கிறாய்!

வாடிவாசல் வந்து நின்று
நீதிபெற்ற இளைஞர் கூட்டம்
தேடிவந்து நியாயம் கேட்க
நெடுவாசலும் நின்று காட்டும்!
நெடுவாசலும் வென்று காட்டும்!!

வெல்லுமிந்த இளைஞர் கூட்டம்
என்று சொல்வேன் நானடா-
வென்றுநின்று வலிமை கண்ட
தமிழினம் தானடா தமிழினம் தானடா!!

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.