March 15, 2017
ஆண்கள் கவனத்திற்கு (மனைவியுடன் பொது இடங்களுக்கு செல்லும்போது உஷாராக இருக்கவும்)
ஒரு கணவனும் மனைவியும் லிப்ட் ல 10 வது மாடியிலிருந்து கீழே வந்து் கொண்டிருக்கிறார்கள்.
5வது மாடியில் அழகான இளம்பெண் ஒருத்தி லிப்ட் ல ஏறி அந்த கணவன் பக்கத்தில் நிற்க,
அவன் அவளின் அழகில் மயங்கி ஜொள் விடுகிறான்.
சிறிது நேரத்துக்குப்பின் அந்த இளம்பெண் இவனது கன்னத்தில் ஓங்கி அறைந்து விட்டு இனி இப்படி செய்தால் செருப்பு பிஞ்சிரும்\" னு சொல்லிட்டு அவனிடமிருந்து விலகி நிற்கிறாள்.
இவனுக்கோ தன் மனைவி முன்னிலையில் அடிவாங்கிய அவமானம்.
லிப்ட் ல இருந்து இறங்கி வெகுநேரமாகியும் மனைவியிடம் பேச வெட்கி வாயடைத்தான்.
வீட்டிற்கு நடக்கிறார்கள்.
ஏங்க அதையே நினைச்சிகிட்டு.... விடுங்க.....
ஏதாவது பேசிட்டு வாங்க.......
இல்லடி, நான் லிப்ட் ல...
அட, அத தான் விடுங்க னு சொன்னேன்ல.
நீங்க ஜொள் விடுறத பொறுக்காம நான்தான் அவ இடுப்பைக் கிள்ளுனேன்.
(அடிப்பாவி.. சண்டாளி..மகிழ்ச்சி
இந்த கதையின் நீதி.
ஒரு கண்ணால் #இளம்பெண்களை ரசித்தாலும், மறு கண்ணால் மனைவியை கண்காணிக்க வேண்டும்....... ஏன்னா வில்லி கூடவே இருக்கா......
உஷாரய்யா .... உஷாரய்யா....
ஆண்கள் கவனத்திற்கு (மனைவியுடன் பொது இடங்களுக்கு செல்லும்போது உஷாராக இருக்கவும்)
Reviewed by Admin
on
March 15, 2017
Rating: 5
Reviewed by Admin
on
March 15, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.