காமராஜருக்கு அப்புறம் தமிழகத்துக்கு மத்திய அரசின் திட்டங்களை கொண்டுவரும் டெல்லி தொடர்பு அருந்து போனது.
நாங்க எதோ எங்க உள்ளுர் அரசியல் வாதிகளை வச்சு தமிழகம் என்கிற குடும்பத்த நடத்திக்கிட்டு வருகிறோம்.
இங்கு இருக்கும் அரசியல்வாதிகள்மோசமானவா்கள் என்றாலும், அப்டியும் இன்றைக்கு தமிழ்நாடுதான் இந்தியாவுலயே டாப்பாக உள்ளது.
இந்தியாவில் இருக்குற 29 மாநிலத்துக்கும் சேத்து கஞ்சி ஊத்துற பெரியண்ணனாக இருப்பவா்கள் தமிழா்கள் தான்.
இந்தியாவுக்கு வருமானம் அளிக்கும் மாநிலங்களில் இரண்டாவது இடத்தில் இருக்கும் மாநிலமும் தமிழகம்தான். அதாவது கிட்டத்தட்ட 14லட்சம் கோடி GDP தருகிற மாநிலம் தமிழகம். ஆனால் மத்திய அரசு தமிழகத்துக்கு எதுவும் செய்யுறதில்லை.
அப்புறம் காஞ்சு போன காவிரி மாதிரி பஞ்சத்துக்கு பொறந்த ரெண்டு மூணு நதிய வச்சே நாங்க அரிசி உற்பத்தில இந்தியாவுலயே ரெண்டாவது இடத்தில் இருக்கிறோம்.
இந்தியாவின் தீப்பெட்டி உற்பத்தியில் 80% தமிழகத்துலதான்கிட்டத்தட்ட 24 மாநிலத்தோட உற்பத்தி எங்களுடைய ஒரே மாநிலம் செய்கிறது.
மொத்த இந்தியாவின் பட்டாசு உற்பத்தில 90% தமிழகம்தான் உற்பத்தி செய்கிறது. கிட்டத்தட்ட 26 மாநிலத்தோட உற்பத்திய நமது ஒரே மாநிலம் செய்கிறது.
லெதர் சூ கோட் போன்ற தோல் பொருட்கள் உற்பத்தில 70% தமிழ்நாட்டில் உற்பத்தியாகிறது. 20 மாநிலம் செய்ய வேண்டிய உற்பத்திய நமது ஒரே மாநிலம் நிறைவேற்றுகிறது.
இந்தியாவுடைய மொத்த முட்டை கறிகோழி சப்ளையில நமது மாநிலம் 90%. உற்பத்தி திறன் கொண்டது. அதாவது கிட்டத்தட்ட 27 மாநிலம் செய்ய வேண்டிய உற்பத்திய நமது ஒரே மாநிலம் செய்து வருகிறது.
ட்ரான்ஸ்போர்ட்ல லாரி பாடி கட்டுறதுல இந்தியாவுடைய உற்பத்தியில் 50%, அதாவது கிட்டத்தட்ட 15மாநிலம் செய்ய வேண்டிய உற்பத்திய நமது ஒரே மாநிலமே செய்கிறது.
ஆப்செட் ப்ரிண்ட்டிங்கல 60% நமது தமிழகத்துலதான், அதாவது கிட்டத்தட்ட 20 மாநிலம் செய்ய வேண்டிய உற்பத்திய நமது ஒரே மாநிலம் செய்கிறது.
டெக்ஸ்டைல்ல நாமதான் 50% அதாவது கிட்டத்தட்ட 15 மாநிலம் செய்ய வேண்டிய உற்பத்திய நமது ஒரே மாநிலம் உற்பத்தி செய்கிறது.
ஆயத்த ஆடையில நாமதான் 90% அதாவது 27 மாநிலம் செய்ய வேண்டிய உற்பத்திய நமது ஒரே மாநிலம் உற்பத்தி செய்கிறது.
அப்பால மஞ்சள் கடலை கரும்புன்னு இந்தியாவுடைய மொத்த உற்பத்தில பாதிய நாமதான் உற்பத்தி பன்றோம்..
அப்புறம் இந்தியாவுலயே அதிகமா சுற்றுலா வருமானம் வருவதும்,தமிழ்நாட்டில் தான். ஒரு வருசத்துல உள்ளநாட்டு சுற்றுலா பயணிகள் 40 கோடி பேரு தமிழகத்துக்கு வருகிறார்கள். வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் 50 லட்சம்பேரு தமிழகத்துக்கு வருகிறார்கள்.
ஆக நாங்க இந்த குஜராத்தி மார்வாடி வடநாட்டு அரசியல் வாதிகள் உதவிகள் இல்லாமலேயே அரைகுறை அரசியல்வாதிகளை வச்சே இருக்கறதை கொண்டு பறக்குற அளவுக்கு எங்க மாநிலத்தை வைத்துள்ளோம்.
எனவே வளர்ச்சியின் பெயரால் தேவையில்லாத நாசக்கார திட்டங்களை தமிழகத்துக்கு கொண்டு வந்து அழிக்காதீங்க. ஒன்றுக்கும் உதவாத அரசியல்வாதிகளை வைத்தே இவ்வளவு செய்துக்கிட்டு வருகிறது தமிழகம் என்றால், இங்க நல்லாட்சி வந்தா என்ன நடக்கும்னு யோசிச்சு பாருங்க, இப்படி நல்லா இருக்கிற தமிழகத்தை ஏன் பாலைவனமாக மாற்ற முயற்சி செய்கிறீர்கள். என்ன கொடுமைசார் இது.


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.