ஜெயலலிதா மறைவிற்கு பிறகு, ஓபிஎஸ் அணி, சசிகலா அணி என அதிமுக இரண்டாக பிரிந்தது. மேலும் ஜெ., அண்ணன் மகள் தீபா, எம்.ஜி.ஆர் -அம்மா -தீபா பேரவை என்ற பெயரில் அமைப்பை ஆரம்பித்தார்.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் டிடிவி தினகரன், தீபா, மதுசூதனன் ஆகியோர் வேட்பாளர்களாக களம் இறங்குகிறார்கள். இந்நிலையில் தீபாவின் கணவர் மாதவன் கடந்த சில நாட்களுக்கு முன் ஜெ., சமாதியில் அஞ்சலி செலுத்தினார்.
பின்னர் புதுக்கட்சி துவங்க போவதாக அறிவித்தார் மாதவன். இதனால் தீபா பேரவை தொண்டர்கள் குழப்பம் அடைந்தனர். ஆனால், தீபா அதை மறுத்தார்.
இந்நிலையில் தனது சொந்த ஊரான பெரியகுளம் கைலாசப்பட்டியில் உள்ள தனது பண்ணை வீட்டில் நிருபர்களிடம் பன்னீர்செல்வம் கூறிகையில், இரட்டை இலை சின்னத்தை முடக்க முடியாது. அது எங்களுக்கு தான் கிடைக்கும்.
எம்.ஜி.ஆருக்கு பின்னால் அதிமுகவை மாபெரும் இயக்கமாக ஜெயலலிதா நடத்தி வந்தார். சிறந்த நிர்வாகத்தை அளித்தார். ஜெயலலிதா கொள்கை கோட்பாடுகளை ஏற்று தீபாவுடன் இணைந்து செயல்பட தயார்.
ஜெயலலிதா மறைவிற்கு பிறகு அசாதாரண சூழ்நிலை உருவாகியது. அப்போது அவருடைய வழியில் திறமையான ஆட்சியை நடத்தி வந்தேன். தற்போது உள்ள சூழ்நிலையில் மக்கள் நல்ல தீர்ப்பு தருவார்கள் என்று தெரிவித்துள்ளார்.
பன்னீர்செல்வம் தீபாவுக்கு ஆதரவு தெரிவித்திருப்பது, மன்னார்குடி கும்பலை விரட்டவும், இடைத்தேர்தலில் தினகரனுக்கு சவுக்கடி கொடுப்பதற்காகவும் தான் என்று பன்னீர்செல்வம் தரப்பினர் தெரிவித்துள்ளனர்.


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.