Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

March 6, 2017

பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு தமிழிசை அக்கா கண்டனம்..! இது என்ன புது கலாட்டா..!


தமிழகத்தில் பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு பாஜக கண்டனம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் பெட்ரோல் விலை, லிட்டருக்கு 3 ரூபாய் 78 காசும், டீசல், லிட்டருக்கு 1 ரூபாய் 76 காசும் உயர்த்தப்பட்டுள்ளது.

இந்த விலை உயர்வு நள்ளிரவு முதல் அமலுக்கு வந்துள்ளது. பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியை, தமிழக அரசு உயர்த்தியதால் இந்த விலை உயர்வு ஏற்பட்டுள்ளது.

அப்ப இந்த உயா்வுக்கும் மத்திய  பாரதிய ஜனதா கட்சிக்கும் தொடா்பே இல்லையாம்.

நாங்க ஆட்சிக்கு வந்தா பெட்ரோல், டீசல் விலையை குறைப்போம் என்று கூறி ஆட்சியை கைப்பற்றி பா.ஜ.க தற்போது, காங்கிரஸ் அரசைக்காட்டிலும் அதிகமாக விலை உயா்வை தந்து வருகிறது.

இதற்கு தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் தமிழிசை கண்டனம் தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் கூறும்போது,

‘தமிழக அரசு பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தியிருப்பது கண்டனத்திற்குரியது.பால் விலை உயர்த்தப்பட்டிருப்பதும் தமிழக மக்களை நிலைகுலையச் செய்திருக்கிறது. விலையேற்றத்தைக் கட்டுப்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவில்லையென்றால் போராட்டம் நடத்தப்படும்’ என்றார்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.