Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

March 20, 2017

இரட்டை இலை சின்னம் முடக்கம்? தேர்தல் ஆணையம் திடீர் குண்டு! சசி, பன்னீர் அணியினர் அதிர்ச்சி!


முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவிற்கு பிறகு சசிகலா, ஓபிஎஸ் தலைமையில் இரு அணிகளாக அதிமுக பிரிந்தது. இரு அணியினரும் அதிமுகவின் இரட்டை இலை சின்னத்திற்கு உரிமை கோரி வருகின்றனர்.
இது சம்பந்தமாக இருதரப்பினரும் தேர்தல் ஆணையத்திடம் கட்டு கட்டாக ஆவணங்களை சமர்ப்பித்து வருகின்றனர். சசிகலா அணி பக்கம் எம்.எல்.ஏ.க்கள் இருந்தாலும், முக்கிய பதவிகளில் இருக்கும் அதிமுக அமைச்சர்கள் ஓபிஎஸ் பக்கம் இருக்கின்றனர்.
இந்நிலையில் ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் ஏப்ரல் 12ம் தேதி நடைபெறுவதாக அறவிக்கப்பட்டுள்ளது. சசிகலா அணி சார்பாக டிடிவி தினகரனும், ஓபிஎஸ் அணி சார்பாக மதுசூதனனும் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
ஓபிஎஸ் தரப்பில் அளிக்கப்பட்டுள்ள ஆவணங்களுக்கு, சசிகலா தரப்பு பதில் தருவதோடு அதற்கான ஆவணங்களை சமர்பிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
வரும் 22ம் தேதி இருதரப்பினரையும் தேர்தல் ஆணையத்தில் ஆஜராகும்படி உத்தரவிடப்பட்டுள்ளது. வரும் 23ம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாள். அதற்குள் இரட்டை சிலை சின்னம் யாருக்கு என்பதை முடிவு செய்தாக வேண்டும்.
எனவே 22ம் தேதி ஒரு நாளில் இரட்டை சிலை சின்னம் யாருக்கு என்று தேர்தல் ஆணையம் முடிவெடுத்துவிடுமா என்பது சந்தேகம் தான்.
அப்படி ஆணையம் இறுதி முடிவு எடுக்காவிட்டால் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் இரட்டை சிலை சின்னத்தை முடக்க வாய்ப்பு இருப்பதாக ஆணைய வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.