March 12, 2017
மொய் பணத்துக்கு கம்ப்யூட்டர் ரசீது - காதணி விழாவில் கலக்கல்... இதுதான் டிஜிட்டல் இந்தியாவா?
தென்னிந்திய மக்களோட கலாச்சாரத்தில் பல சிறப்புகள் இருந்தாலும் , ஒரு சில முறைகள் என்றும் மக்களால் பின்பற்றப்படும் என்பதற்கான உதாரணம் தற்போது நடந்துள்ளது .
எந்த ஒரு விழாவாக இருந்தாலும் , அதாவது காதணி விழா, திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்சிகள் அனைத்திற்கும் உற்றார் உறவினர்களை அழைப்பது வழக்கம் .
அவ்வாறு விழாவிற்கு வரும்உற்றார் உறவினர்கள் பலரும், தங்களால் இயன்றதை அன்பளிப்பாக " மொய்" என்ற பெயரில் பணத்தையோ அல்லது சற்று விலை உயர்ந்த பொருளையோ கொடுப்பார் .
இதே போன்று , மற்றவர்கள் வீட்டு விழாவிற்கு செல்லும் போது, இதற்கு முன்னதாக அவர்கள் தங்கள் வீட்டு விழாவிற்கு எப்படி மொய் செய்தார்களோ அதே போன்று அவர்களுக்கும் செய்வர் என்பது குறிப்பிடத்தக்கது .
இவ்வாறு செய்யப்படும் அன்பளிப்பு "மொய்" சில சமயத்தில் மறந்துக்கூடபோகும் . ஆனால் தற்போது விஞ்ஞான வளர்ச்சிக்கு ஏற்பவும் ,
டிஜிட்டல் இந்தியா கனவிற்கு ஏற்பவும் தற்போது மதுரை செக்கானூரணியில் இன்று நடந்த காதணி விழாவில் மொய் வைப்பதற்கு கம்ப்யூட்டரில் ரசீது வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது . இதற்காக தனியாக ஒரு சாப்டுவேர் ரெடி செய்யப்பட்டுள்ளது என்றால் பாருங்களேன்.
இதன் மூலம், யாரெல்லாம் அன்பளிப்பு கொடுத்துள்ளார்கள் , எவ்வளவு பணம் கொடுத்துள்ளார்கள் என சுலபமாக தெரிந்துக் கொள்ள முடியும் . அதுமட்டுமின்றி நொடி பொழுதில், ஒட்டு மொத்தமாக எவ்வளவு பணம் அன்பளிப்பாக கிடைத்துள்ளது என்பதையும் தெரிந்துக் கொள்ள முடியும் .
இதன் மூலம் கலாசாரம் பழக்க வழக்கங்கள் மாறமால் , அனைத்திலும் தொழில் நுட்ப வளர்ச்சியை பயன்படுத்திக் கொள்ள முடியும் என்பது உறுதியாகிவிட்டது
மொய் பணத்துக்கு கம்ப்யூட்டர் ரசீது - காதணி விழாவில் கலக்கல்... இதுதான் டிஜிட்டல் இந்தியாவா?
Reviewed by மறத்தமிழன்
on
March 12, 2017
Rating: 5
Reviewed by மறத்தமிழன்
on
March 12, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.