March 8, 2017
மகளிர் தின வாழ்த்துகள் :டெல்லி, நிர்பயா நினைவில் இருக்கிறாரா நண்பர்களே? ஓடும் பேரூந்தில்…
2012-இல் நாடே கொந்தளித்து தற்பொழுது கொஞ்சம் கொஞ்சமாக மறந்து போன நிர்பயா..!
ஆறு பேர் சேர்ந்து ஓடும் பேரூந்தில், மிருகத்தனமாக அந்த அபலைப் பெண்ணை சிதைத்து தூக்கி ஏறிந்து விட்டு போனார்கள். நாடே கொந்தளித்தது. போராட்டம் நடத்தியது.
அந்தப் பெண்ணின் உண்மையான பெயரை தெரிந்து கொள்ள தேசமே ஆவலுடன் காத்திருந்தது.
ஆனால், அவருடைய நினைவு தினத்தில் அவருடைய தாயார், “என் மகளின் பெயரை சொல்ல நாங்கள் ஏன் வெட்கப்பட வேண்டும்?
பாலியல் வன்கொடுமைகள் செய்பவர்கள்தான் வெட்கப்பட வேண்டும். என் மகளின் பெயர் நிர்பயா அல்ல, ஜோதி சிங்”, என பெருமையாக கூறினார்.
நிர்பயா சேட்னா டிவாஸ் என்ற நினைவு தினத்தை செல்லி பெண்கள் அமைப்புகளும் இளைஞர்களும் டெல்லியில் ஏற்பாடு செய்தனர். அப்போதுதான் ஜோதி சிங்கின் தாயார் அவரது பெயரை வெளிப்படுத்தினார்.
ஜோதி சிங்கின் தாய் ஆஷா தேவி மற்றும் தந்தை பத்ரி சிங் பாண்டே ஆகியோர் தன் மகளுக்கு ஏற்பட்ட பாலியல் கொடுமையில் பெருங்குற்றத்தை நிகழ்த்திய சிறுவன், விடுதலையாகி விட்டான்.
“அவனுக்கு 16 வயதா? 18 வயதா? என தெரியாது. ஆனால், அவன் பெருங்குற்றத்தை செய்திருக்கிறான். அவன் மட்டும் அல்லாது மற்ற நான்கு பேருக்கும் மரண தண்டனை கொடுக்க வேண்டும்”, என ஜோதி சிங்கின் தாயார் கூறியுள்ளார்.
மரண தண்டனை தேவையா? இல்லையா? என்ற விவாதங்களுக்கு இடையில் சிறுவர்களுக்கு இனி மரண தண்டனை கொடுக்க வேண்டுமா? அல்லது வரிசையாக தையல் மெஷின் வாங்கிக் கொடுக்க வேண்டுமா ? என்பதை அடிப்படையில் இருந்து விவாதிக்க வேண்டிய விஷயம் இது.
மகளிர் தின வாழ்த்துகள் :டெல்லி, நிர்பயா நினைவில் இருக்கிறாரா நண்பர்களே? ஓடும் பேரூந்தில்…
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
March 08, 2017
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
March 08, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.