Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

March 11, 2017

காதலியின் கழுத்தை அறுத்த காதலன் தூக்கிட்டு தற்கொலை.. மதுரை அருகே பரபரப்பு !


மதுரை அருகே காதலியின் கழுத்தை பிளேடால் அறுத்த இளைஞர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் அருகே உள்ள வலசை கிராமத்தை சேர்ந்தவர் ராஜாமணி (23), கட்டிட தொழிலாளியான இவரும் அதே பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவியும் கடந்த சில வருடங்களாக காதலித்து வந்தததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாரு ராஜமணி அந்த பெண்ணை வற்புறுத்தியுள்ளார். ஆனால் அவர், படிப்பை முடித்தபின் திருமணம் செய்து கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.
இதனிடையே நேற்று இருவரும் மதுரை அருகே உள்ள சரந்தாங்கி மலை பகுதிக்கு சென்றுள்ளனர்.

அங்கு இருவரும் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர். அப்போது அவர்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த ராஜாமணி பிளேடால் தனது கையை அறுத்துக் கொண்டதோடு, எதிர் பாராதவிதமாக காதலியின் கழுத்தையும் அறுத்துள்ளார். இதில் அவர் மயங்கி விழுந்தார்.

இதை பார்த்த ராஜாமணி, காதலி இறந்து விட்டதாக நினைத்து, அங்கிருந்த மரத்தில் தானும் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். சிறிது நேரத்தில் அந்த பெண் எழுந்து பார்த்தபோது, ராஜாமணி தூக்கில் பிணமாக தொங்குவதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

இதுகுறித்து அவர் பாலமேடு போலீசுக்கு தகவல் கொடுத்தார். அதன் பேரில் பாலமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். கழுத்தில் காயமடைந்த அந்த பெண் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். காதலியை பிளேடால் அறுத்து, இளைஞர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.