Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

March 11, 2017

சிறுநீர் கழிக்க கரும்பு தோட்டத்திற்கு ஒதுங்கிய தலித் பெண்ணுக்கு அடி உதை!


உத்தர பிரதேச மாநிலத்தில் வயலில் சிறுநீர் கழிக்க ஒதுங்கிய தலித் பெண்ணை விவசாயி அடித்து உதைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தர பிரதேச மாநிலத்தின், பென்ஸ் கிராமத்தின் அருகே கரும்புக் காட்டில் சிறுநீர் கழித்த  தலித் பெண்ணை அந்த வயலின் விவசாயி அடித்து துன்புறுத்தியுள்ளார். அந்த பகுதியில் திருமண நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க வந்த பெண் காட்டுப்பகுதியில் ஒதுங்கியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அவரது சமூகத்தை சார்ந்த சிலர், பெண்ணை தாக்கிய விவசாயியை கைது செய்ய வலியுறுத்தி, தில்லி-டேராடூன் நெடுஞ்சாலையை மறித்து போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
இதனை தொடர்ந்து, போலீஸார் விவசாயியை கைது செய்து, விசாரணை நடத்தியதை அடுத்து, சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.