Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

March 12, 2017

நேற்று பொன்னார்.. இன்று நிர்மலா சீதாராமன். மீனவர் போராட்டத்தை நிறுத்த பாஜக தொடர் முயற்சி


தங்கச்சிமடத்தைச் சேர்ந்த மீனவர் பிரிட்ஜோ இலங்கை கடற்படையால் கடந்த 6ம் தேதி சுட்டுப்படுகொலை செய்யப்பட்டார். படுகொலைக்கான நியாயம் கேட்டு 6 நாட்களாக மீனவ மக்கள் தொடர் போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.

இந்தப் போராட்டத்தை முடிவிற்கு கொண்டு வர நேற்று கூட மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தங்கச்சிமடத்திற்கு நேரில் சென்று போராட்டக்காரர்களிடையே பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். ஆனால் இவர் அளித்த வாக்குறுதிகளை மக்கள் ஏற்க தயாராக இல்லை.
இந்நிலையில் இன்று மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தங்கச்சிமடத்திற்கு சென்று போராட்டக்காரர்களிடையே மீண்டும் பேச்சவார்த்தையில் ஈடுபட்டுள்ளார்.

மீனவர்களின் நியாயமான போராட்டத்தை எப்படியாவது நிறுத்திவிட வேண்டும் என்று மத்தியில் ஆளும் பாஜக அரசு தொடர்ந்து முயற்சி செய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக நிர்மலா சீதாராமன் தங்கச்சிமடத்தில் முகாமிட்டுள்ளார்.

வெளியுறவுத் துறை செயலர் நேரில் வந்து மீனவர்கள் மீதான தாக்குதல் இனி தொடராது என உறுதி அளித்தால் போராட்டம் நிறுத்தப்படும் என்று போராட்டக்காரர்கள் கூறி வரும் நிலையில், அதற்கான உறுதிமொழியை அளிக்க மறுக்கும் பாஜக அரசு, அமைச்சர்களை விட்டு போராட்டத்தை மட்டும் நிறுத்துவதற்கு அனைத்து நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.