Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

March 8, 2017

நெடுவாசலில் மார்பில் அடித்து ஒப்பாரி போராட்டத்தில் ஈடுபட்ட பெண் பலி.! இந்த பாவம் மத்திய மாநில அரசுகளையே சேரும்


நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து கிராம மக்கள், மாணவர்கள் என பத்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் 21 நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இவர்களின் போராட்டத்திற்கு பல்வேறு அரசியல் கட்சியினர், மற்றும் சினிமா துறையினர் தங்களது ஆதரவை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், இன்று பெண்கள் அனைவரும் ஹைட்ரோ திட்டத்தை மத்திய அரசு உடனடியாக கைவிட வேண்டும் என்று மார்பில் அடித்து ஒப்பாரி வைக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த போராட்டத்தில் ஈடுபட்ட பொன்னம்மாள் (60) என்பவருக்கு திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டது. உடனடியாக அவரை அங்கிருந்த போராட்டக்குழுவினர் மீட்டு ஆம்புலன்சில் புதுக்கோட்டையில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

ஆனால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். போராட்டத்தில் கலந்து கொண்ட பெண் உயிரிழந்தது நெடுவாசல் கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.