Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

March 13, 2017

வடகாடு போராட்டத்தில் கருப்பு கொடியுடன் பங்கேற்ற குழந்தைகள்


வடகாட்டில் இன்று 9-வது நாளாக தொடரும் போராட்டத்தில் கருப்பு கொடியுடன் குழந்தைகள் கலந்துகொண்டனர்.

போராட்டத்தில் கருப்பு கொடியுடன் கலந்துகொண்ட குழந்தைகள்
புதுக்கோட்டை:

புதுக்கோட்டை மாவட்டம் வடகாட்டில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக தொடர்ந்து 9-வது நாளாக இன்று நடந்த போராட்டத்தில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

மேலும் சுந்தரிகொல்லை, வடகுபட்டி, காமராஜர்புரம், குலமங்கலம், கொத்தமங்கலம், கீரமங்கலம், வடகாடு ஆகிய பகுதிகளை சேர்ந்த 5 வய திற்குட்பட்ட குழந்தைகள் பலர் ஹைட்ரோ கார்பன் திட்டத்தின் பாதிப்புகள் பற்றிய பதாகைகளை கையில் ஏந்தியபடி வந்து போராட்டத்தில் பங்கேற்றனர்.

சென்னையில் இருந்து வந்துள்ள கல்லூரி மாணவர்கள் 10 பேர், போராட்டத்தில் தொடர்ந்து தங்கியிருந்து பங்கேற்று வருவதோடு, இன்று காலை அப்பகுதியில் சீமை கருவேல மரங்களை அகற்றும் பணியில் ஈடுபட்ட னர். போராட்டத்தில் பங்கேற்று பேசிய மாணவர்கள், சீமை கருவேல மரங்களாலும் நிலத்தடி நீர் பாதிக்கப்படும். எனவே அதனை அகற்ற வேண்டும் என்றனர்.

நேற்று நடந்த போராட்டத்தில் அப்பகுதி பள்ளி மாணவ, மாணவிகள் ஓடுகளை கையால் உடைப்பது, தீப்பந்தம் சுற்றுவது மற்றும் சிலம்பாட்டம் ஆடி தங்களது வீரத்தை வெளிப்படுத்தினர்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.